Saturday, July 25, 2026
No menu items!

இராமலிங்கம் சந்திரசேகர்

குற்றவாளிகள் நீதி தேவதை மூலம் சுத்தம் செய்யப்படுவார்கள் – அமைச்சர் சந்திரசேகர்..!

சூழலை சுத்தப்படுத்துவது போல் எமது ஆட்சியின் கீழ் ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி தேவதை மூலம் சுத்தம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கடற்கரையை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் 23.02.2025 நேற்று 'அழகான கடற்கரையின் பங்குதாரர்களாவோம்' எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது. தூய்மையான இலங்கை...

மக்களோடு மக்களாக நெடுநேரம் வரிசையில் காத்திருந்த சந்திரசேகர்..!

கண் சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சென்றிருந்தார். நெடுநேரம் வரிசையில் காத்திருந்து தனக்குரிய இலக்கம் வந்த பிறகு வைத்தியரை அவர் சந்தித்தார். அமைச்சராக இருந்தபோதிலும் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தாது, ஏனைய நோயாளிகளுடன் வரிசையில் இன்று அமைச்சர் சிகிச்சை பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அனைத்து சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளும் நிறுத்தப்படும் – அமைச்சர் சந்திரசேகர்..!

நாட்டில் இருக்கும் அனைத்து சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளும் தமது அரசாங்கத்தால் நிறுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்றொழிலாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் புங்குடுதீவில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கு...

யாழ். இந்துக் கல்லூரிக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய திடீர் விஜயம்..!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (2/15/2025) காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரி அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் தேவைகளை கேட்டறிந்து கொண்டார். கல்லூரி அருங்காட்சியகம், மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் பார்வையிட்டார். இதன்போது கல்லூரி மண்டபத்தில் பிரதமர் உரையாற்றியதுடன் பிரதமருக்கு பாடசாலை...

தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பில் சாடும் சந்திரசேகர்..!

இலங்கையின் கடல் வளத்தை அழிதொழிக்கும் நடவடிக்கையில் தமிழக மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில் தொப்புள் கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். தமிழக மீனவர்கள் அத்துமீறும் செயற்பாடு தொடர்பில் 12.02.2025 அன்று ஊடகவியலாளர்களுக்கு...

அமைச்சர் சந்திரசேகர் நீரியல்வளத்துறை திணைக்களத்திற்கு திடீர் கள விஜயம்..!

கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு நேற்று (11.02.2025) திடீர் கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். மேற்படி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் சுதாகரனுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர், முக்கிய பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தார். மேற்படி திணைக்களம் ஊடாக மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய...

நெல் அறுவடை திருவிழாவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்..!

சுழிபுரம் மேற்கு திருவடி நிலை சவுக்கடி பகுதியில் குகன்சங்கமும், கலைமகளும் சுழிபுரம் மேற்கு புலம் பெயர் தேசமும் தாயக உறவுகளும் இணைந்த பசுமை புரட்சி திட்ட செயல் குழுவினரின் நெல் அறுவடை திருவிழா 02.02.2025 அன்று எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் இலங்கை பாராளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில்...

எமது நாட்டுக்குரிய கடல் வளம் நிச்சயம் பாதுகாக்கப்படும் – சந்திரசேகர்..!

எமது நாட்டுக்குரிய கடல் வளம் நிச்சயம் பாதுகாக்கப்படும் எனவும், அதற்கான விசேட வேலைத்திட்டமொன்று உருவாக்கப்படும் எனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளைத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். அல்லைப்பிட்டிய பகுதியில் வெண்புரவி புனித அந்தோனியார் கடற்றொழில் கிராமிய அமைப்பின் ஏற்பாட்டில், அமைச்சருக்கான வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த அமைச்சருக்கு மக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. மக்களுடன்...

நாட்டை பழைய பாதையில் அழைத்துச் செல்ல முடியாது – சந்திரசேகர்..!

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுப்பதே எமது இலக்காகும்.  அந்த இலக்கை நோக்கியே நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மீண்டும் இந்த நாட்டை தோல்வி அடைந்த பழைய பாதையில் அழைத்துச் செல்ல முடியாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (31/1/2025)...

மாவை அண்ணன் மக்களுக்காக செய்த நினைத்ததை நாம் செய்வோம்; MP சந்திரசேகர்!

‘அறவழி போராட்டம், சிறைவாசம் என தனது ஐந்து தசாப்தகால அரசியல் பயணத்தில் தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பிவந்த மாவை சேனாதிராஜாவின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவு தொடர்பில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் டெங்கு மரணங்கள் 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு...
- Advertisement -spot_img