Monday, November 9, 2026
No menu items!

இலங்கை

மட்டக்களப்பில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!!!

மட்டக்களப்பில் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தங்களின் நீண்டநாள் கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் சனிக்கிழமை (01) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த ஆர்ப்பாட்டம் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தேசிய அமைப்பின் ஏற்பாட்டில்  காந்திபூங்காவிற்கு முன்னால்  இடம்பெற்றது. ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் சமத்துவமான ஓய்வூதியம் வேண்டும், ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமல் 28 வருடங்கள்...

வாகனங்கள் தொடர்பான தகவல் சேகரிப்பு ஆரம்பம் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு..!!

வாடகை வாகன பயண   சேவைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில், இன்று (நவம்பர் 01) முதல் நாட்டளவில் தரவுகள் சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இலக்கம் 08 – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்தச் சட்டம் அடிப்படையில்...

நீரில் அடித்துச் செல்லப்பட்டு நான்கு பெண்கள் பலி..!!

தமிழகத்தில் கடலில் குளிக்கச் சென்ற இலங்கை பெண் உட்பட்ட நான்கு பெண்கள் பலத்த அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எண்ணூர் அருகே கடலில் நேற்று(31) மாலை இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அலையால் அடித்துச்செல்லப்பட்ட பின்னர் குறித்த பெண்களின் உடல்கள் அனைத்தும் அதே இடத்தில் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, 17...

எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான தகவல்.!!

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் திருத்தம் இல்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் இயக்குநர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் முழுவதும் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயுவின் விலை ரூ. 4,115க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

எரிபொருள் விலையில் மாற்றம்..!!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் கீழ் இம்முறை எரிபொருள்களின் விலைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.  அதன்படி அதன் புதிய விலை 294 ரூபாயாகும். சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன்...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில்  சீரான வானிலை நிலவக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின்...

உலகளாவிய ரீதியில் வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த தெற்காசிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடம்!

உலகளாவிய ரீதியில் வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த தெற்காசிய நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகின் மிகப்பெரிய வாழ்க்கைச் செலவு தரவுத்தளமான நம்பியோ இதனை குறிப்பிடுள்ளது. இதன் கூற்றுப்படி, வாடகையைத் தவிர்த்து, ஒரு தனிநபரின் வாழ்க்கைச் செலவு மாதத்திற்கு இலங்கையில் $506 (ரூ. 153,899) என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கொழும்பில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு, மளிகைப்...

இலங்கையில் முதியோர் மக்கள் தொகையில் அதிகரிப்பு!

இலங்கையின் முதியோர் மக்கள் தொகை 2012 இல் 12% இலிருந்து 2024 இல் 18% ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், இது ஆசியாவின் வேகமான அதிகரிப்புகளில் ஒன்றாகும். 2040 ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை 25% ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது இலங்கையர்களில் நான்கில் ஒருவர் 60 வயது அல்லது அதற்கு...

அதிகரித்து வரும் மலேரியா நோய்தொற்று!

இலங்கையில் மலேரியா நோய்த்தொற்று மீண்டும் பரவக்கூடும் என்ற அச்சத்தைச் சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மலேரியா தொற்று அதிகரித்துவருவதற்கு முக்கிய காரணம் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளினால் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை 27 பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளிலிருந்தபோது தொற்றுக்குள்ளான இலங்கையர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதனைக்...

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றம்– சர்வதேச நாணய நிதியம்!

எதிர்வரும் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 3.1 சதவீதம் வரை வளர்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்லின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இதைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் IMF உடனான சீர்திருத்த வேலைத்திட்டத்தைத் தொடங்கியதன் பின்னணியில், நாட்டின் பொருளாதாரம் வலுவான மீட்சியை...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img