Monday, November 9, 2026
No menu items!

இலங்கை

செப்டம்பரில் இலங்கையின் பணவீக்கம் 2.1% ஆக உயர்வு..!!

2025 செப்டம்பர் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டுக்கு அமைய மாதாந்திர நுகர்வோர் பணவீக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஓகஸ்ட் மாதத்தில் 1.5% ஆக இருந்த நாட்டின் பணவீக்கம், 2025 செப்டம்பர் மாதத்தில் 2.1% ஆக அதிகரித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, 2025 ஓகஸ்ட் மாதத்தில் 2.9%...

பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மோதல்; 28ஆம் திகதி வரை விளக்கமறியலில்..!!

ருஹூணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் நேற்று(20) ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 21 மாணவர்கள், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாத்தறை பிரதான நீதவான் சதுரய திசாநாயக்க அவர்கள், மாணவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். நேற்றைய மோதலில் பல்கலைக்கழக சொத்துகள் சேதமடைந்ததாகவும், மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறை அடிப்படையாகக் கொண்டு இந்த கைது...

நாளை பாராளுமன்ற உறுப்பினர்கள் இளஞ்சிவப்பு ஆடையில்..!!

உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, நாளை புதன்கிழமை (22) பாராளுமன்றத்தில் ஒரு சிறப்பு முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிய வேண்டும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (21) அறிவித்துள்ளார். பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை அனைத்து உறுப்பினர்களுக்கும் உறுப்பினர் நுழைவாயிலில் ஒரு சின்னத்தை விநியோகிக்க...

இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் பெரும் முன்னேற்றம்…

இலங்கை முதலீட்டு சபை (BOI), 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரைஅங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் மூலம்  வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மொத்தம் 827 மில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் முதலீடுகளுக்காக பெறப்பட்ட வெளிநாட்டு வணிகக் கடன்களும் அடங்குகின்றன. இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 138% அதிகரிப்பைக் காட்டியுள்ளதாக அந்த...

ஹிக்கடுவ பகுதியில் வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடு!!

ஹிக்கடுவ, மஹவத்த பகுதியில் அடையாளம் தெரியாத இருவர் ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (20) இரவு ஹிக்கடுவ, மஹவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 4–5 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை...

GovPay மூலம் போக்குவரத்து அபராதம்: இரண்டு மாதங்களில் ரூ. 3 கோடி வசூல்!!

GovPay டிஜிட்டல் கட்டண தளம் மூலம் மேற்கு மாகாணம் மற்றும் தம்புள்ளை – அநுராதபுரம் இடையேயான பகுதிகளில் போக்குவரத்து உடனடி அபராதங்கள் வசூலாகி, கிட்டத்தட்ட ரூ. 30 மில்லியன் ஈட்டப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சின் டிஜிட்டல் விவகார பணிக்குழுவின் தலைவர் ஹர்ஷ புரசின்கே இதனை இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்த GovPay...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்..!!

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள். மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ்...

வவுனியாவில் மாணவர்களுக்கு விற்க தயாராக இருந்த பல மில்லியன் பெறுமதியான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

பத்து மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மூன்று இலட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளை புத்தளம், கல்பிட்டியிலிருந்து வவுனியாவிற்கு கொண்டு சென்ற சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி, குறித்த சந்தேகநபர் நேற்று முந்தினம் (19.10.2025) வவுனியா, மூன்று முறிப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர். கருவாடு கொண்டு செல்வதாகக் கூறி கெப் வண்டியொன்றினுள்...

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் – மீண்டும் திறந்து ஆறு ஆண்டு நிறைவு!!

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு இந்த மாதத்துடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. முன்னாள் வட மாகாண ஆளுநர் டாக்டர் சுரேன் ராகவனின் முயற்சிகளும், அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளும் இணைந்து, 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17ஆம் திகதி பலாலி விமான நிலையம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளில், மொத்தம்...

அமைச்சு பொறுப்புகளில் மாற்றம் – ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு!!

பல அமைச்சுக்களின் நோக்கங்கள், செயல்பாடுகள், துறைகள், சட்டரீதியான அமைப்புகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது, அண்மையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்துடன் இணைந்து வெளியிடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அந்தத் திருத்தங்களின்படி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த சிவில் பாதுகாப்புத் துறை நீக்கப்பட்டுள்ளதுடன்,...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img