Monday, November 9, 2026
No menu items!

எதிர்க்கட்சித் தலைவர்

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலைமிரட்டலா?

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட இலங்கை அரசியல்வாதிகளுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் ஒன்றை பிரதமர் அலுவலகத்திற்கு...

நாட்டை அனுரவிடம் ஒப்படைத்த மக்களுக்கு இன்று ஏமாற்றமே மிஞ்சியுள்ளது; சஜித் பிரேமதாச!

சுபநேரத்தில் நாட்டை அனுரவிடம் ஒப்படைத்த மக்களுக்கு இன்று ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மாவனல்லை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தற்போது மூன்றாவது தேர்தலை நாம் எதிர்கொண்டுள்ளோம். இந்த உள்ளூராட்சி மன்றத்...

மறைந்த போப் பிரான்சிஸ்க்கு அனுதாபத்தைத் தெரிவித்த சஜித் பிரேமதாச!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) காலை வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று மறைந்த போப் பிரான்சிஸ் அவர்களுக்கு தனது அனுதாபத்தைத் தெரிவித்தார். இலங்கையில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கையின் வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதுவர் பேராயர் பிரயன் உடெய்க்வேவை சந்தித்து சிறிது நேரம் உரையாடியதைத் தொடர்ந்து தனது...

தேசபந்துவின் விசாரணை தொடர்பில் சபாநாயகரின் எழுத்து மூல அறிவிப்பு!

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்படவுள்ள குழுவிற்கு உறுப்பினர் ஒருவரை நியமிக்க பெயர் ஒன்றை பரிந்துரைக்குமாறு சபாநாயகர், பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளைகளின்படி, இந்தக் குழுவிற்கு ஒரு உறுப்பினரை நியமிப்பது பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் இணக்கத்துடன் மேற்கொள்ளப்பட...

எதிர்க்கட்சித் தலைவரின் உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தி..!

குறுகிய அரசியல் நோக்கங்களைத் தள்ளிவைத்து உண்மையைக் கண்டறிவதற்காக அனைவரும் அணிதிரள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இயேசு கிறிஸ்து மனித இதயத்தில் உள்ள இருளை அகற்றி, புதிய நம்பிக்கையை வழங்கி, மனித வாழ்க்கையை மாற்றும் திறனை வெளிப்படுத்தியதை உயிர்த்த ஞாயிறு தினத்தின் சிறப்பம்சமாகக் கருதலாம். எனினும்,...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களை ஏமாற்றுவதில் சிறந்தவர்கள்; சஜித் பிரேமதாச!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு பணியாற்றுவதை விடவும், உண்மைக்குப் புறம்பான விடயங்களைக் கூறுவதிலேயே சிறந்து விளங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் பணியாற்றுவதில் சிறந்தவர்கள் எனப் பெரும்பாலானவர்கள் கருதினர். ஆனால், அவர்கள் பணியாற்றுவதில் சிறந்தவர்கள் அல்ல,...

அனல் மின் நிலைய மாபியாக்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசாங்கம்; சஜித் குற்றச்சாட்டு!

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்த அரசாங்கம், டீசல் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், மின்சாரத்தை அதிக விலைக்கு மக்களுக்கு விற்க அனுமதிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார். நீர்கொழும்பு பல்லன்சேனவில் நடந்த மக்கள் சந்திப்பில், அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து அவர் இதனை தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை...

அமெரிக்காவின் வரி விதிப்பால் நாட்டில் பொருளாதார பேரழிவு ஏற்படும் – சஜித்..!

அமெரிக்க அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட வரிக்கொள்கை நாட்டில் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ரம்புக்கனை பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி இலங்கை ஏற்றுமதிகளுக்கு 44 சதவீத தீர்வை வரியினை விதித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் உலக நாடுகளின்...

மியான்மர்-தாய்லாந்து துயரத்திற்கு இரங்கல் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மியான்மர் மற்றும் தாய்லாந்து தூதரகங்களுக்குச் சென்றுள்ளார். மியான்மர்-தாய்லாந்து துயரத்திற்கு இரங்கல் தெரிவிக்க எதிர்க்கட்சித் தலைவர் வந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அந்நாட்டிற்கான மியான்மர் மற்றும் தாய்லாந்து தூதர்களைச் சந்தித்து தனது இரங்கலைத் தெரிவித்தார், மேலும் ஒரு நாடாக, மியான்மர் மற்றும் தாய்லாந்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகக் கூறினார். சமீபத்தில் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட...

பணியை சரியாக செய்ய முடியாமல் புலம்பிக்கொண்டு கிராமத்து அதிகாரத்தை கேட்கின்றனர் – சஜித்!

2/3 பெரும்பான்மையையும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியையும் வைத்துக் கொண்டு பணியை சரியாக செய்ய முடியாமல் புலம்பிக்கொண்டு கிராமத்து அதிகாரத்தையும் கேட்கின்றனர். நாட்டுக்கு என்ன நேர்ந்துள்ளது என்று வீதியில் இறங்கி மக்களிடம் கேட்டால் பதில் வழங்குவார்கள். மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். மக்கள் விரக்தியடைந்துள்ளனர். பொய் வென்று உண்மை தோற்றுவிட்டது. இன்று மக்கள் வாழ முடியாத நிலையில் வருமானம் இல்லாமல்...
- Advertisement -spot_img

Latest News

4 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூல் செய்த இராமாயணா

ஹிந்தி சினிமாவை சேர்ந்த இயக்குநர் நிதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ராமாயணா: பாகம் 1'. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாக கொண்டு பிரமாண்ட பொருட்செலவில் இப்படம்...
- Advertisement -spot_img