Monday, November 9, 2026
No menu items!

கடற்படை

சட்டவிரோத மீன்பிடி – 17 மீனவர்கள் கைது..!

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிப்ரவரி 13 முதல் 19 வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இவர்கள் கொக்கடி, நந்திக்கடல், முல்லைத்தீவு, ஆனவாசல், சின்னபாடு மற்றும் கடைக்காடு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும், 18 முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கடற்படை...

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது..!

வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள்  நேற்று புதன்கிழமை (19/02/2025) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பினுள் 03 படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், அவர்களை கைது செய்துள்ளதுடன், மூன்று படகுகளையும் கைப்பற்றியுள்ளனர். மன்னார் கடற்பரப்பில் கைது...

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 10 பேரைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட உலர்ந்த இஞ்சி, கருவாடு என்பன பறிமுதல்!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட 1,158 கிலோகிராம் உலர்ந்த இஞ்சி மற்றும் 45 கிலோகிராம் கருவாடு என்பன கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புத்தளம் - தளுவ பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த பறிமுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது, மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கொண்டுவரப்பட்ட உலர்ந்த இஞ்சி 32...

இலங்கை கடற்பகுதியில் வைத்து அதிரடியாக இந்திய மீனவர்கள் கைது..!

மன்னாருக்கு வடக்காகவுள்ள இலங்கை கடற்பகுதியில் சட்டவிரோதமாகக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 2 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், கரைக்கு அழைத்துவரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கிளிநொச்சி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கச்சதீவு பெருந்திருவிழா குறித்து கலந்துரையாடல்..!

எதிர்வரும் மார்ச் மாதம் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு உயர்திருவிழாவுக்கான ஏற்பாடு குறித்தான கலந்துரையாடல் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், பதில் மாவட்ட செயலர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கச்சதீவு பிரதேசத்தை பொது மக்களின் வழிபாட்டுக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தல் குறித்தான நடவடிக்கைகள் கடற்படையால் மேற்கொள்ளப்பட்டு...

“தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” எனும் தலைப்பில் சுதந்திரதின நிகழ்வு!

இலங்கை தனது 77வது சுதந்திர தினத்தை பெப்ரவரி 4 ஆம் திகதி கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் “தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” (ஜாதிக புனருதயத பெலகசெமு) எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படவுள்ளது. இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபேரத்ன இதனைத் தெரிவித்தார். இந்த மாநாட்டின் போது, ​​பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார்...

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

காங்கேசன்துறை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களை பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் இன்று (29) உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் காயம் காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் தெற்கு எல்லையில் துருப்பினர் – ட்ரம்ப்பின் அதிரடி..!

அமெரிக்காவில் தெற்கு எல்லையில் ஆயிரத்து 500 துருப்பினரை நிலைநிறுத்துவதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, ஆயிரம் இராணுவ சிப்பாய்களும் 500 கடற்படையினரும் கலிபோர்னியாவின் சான் டியாகோவிற்கும் டெக்சாஸின் எல் பாசோவிற்கும் அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தடைகளை மேற்கொள்வது மற்றும் பிற எல்லை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவர்கள் சட்ட அமுலாக்கத்தில் ஈடுபட மாட்டார்கள் என அமெரிக்காவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், இரண்டு சீ-17 மற்றும்...

களுதாவளைக் கடலில் கரை ஒதுங்கியுள்ள மர்மப் பொருள்..!

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கடற்கரையில் இன்று (1/17/2025) மரமப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இன்றையதினம் அதிகாலை வேளையில் கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள் தாம் இதுவரையில் அறிந்திராத மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளதாகவும், பின்னர் அதனைக் கரைசேர்த்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இரும்பு உலோகத்தில் செய்யப்பட்டு அதன்மேல் பைரினால் வார்க்கப்பட்டு இளம் நீலக் கலரில் கூம்பக...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img