Saturday, July 25, 2026
No menu items!

கண்டி

மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசத்தில் வாழும் மக்கள்..!

கண்டி மாவட்டத்தில் 1386 குடும்பங்கள் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ள 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1845 குடும்பங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், 19 பிரதேச செயலகப் பிரிவுகளில் 231 குடும்பங்கள் மாத்திரமே கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி...

கண்டியில் இடம்பெற்ற புகழ்பெற்ற ஸ்ரீ தலதா பெரஹெரா!

கண்டியில் இடம்பெற்ற புகழ்பெற்ற ஸ்ரீ தலதா பெரஹெராவை அடையாளப்படுத்தும் வகையில் இலங்கையின் தபால் திணைக்களம் நினைவு முத்திரையொன்றை வெளியிட்டுள்ளது. 205 மிமீ அளவுள்ள இந்த முத்திரை தற்போது உலகிலேயே மிக நீளமானதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க இந்த தனித்துவமான முத்திரையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வழங்கிவைத்துள்ளார். இந்த குறிப்பிடத்தக்க முத்திரைக்கு மேலதிகமாக,...

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் ஏற்பட்ட பாரிய விபத்து!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இன்று (18) இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். கேகாலை மொலகொட பிரதேசத்தில் இரண்டு கார்கள் மோதியதில் குறித்த  விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வாகனங்களில் இருந்த எட்டு மாதங்கள் மற்றும் ஒன்றரை வயதுடைய இரண்டு குழந்தைகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்...

இன்றைய நாளுக்கான வானிலை….

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஏனைய பிரதேசங்களின்  பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

இன்றைய நாளுக்குரிய வானிலை!

யைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்று தொடர்ந்தும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய...

சிறுத்தை நடமாட்டத்தால் பிரதேசவாசிகள் அச்சம்….!

கண்டி, பதியபெலெல்ல, நுகயாய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் சிறுத்தை ஒன்று நடமாடுவதால் பிரதேசவாசிகள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த சிறுத்தை, மான் போன்ற பல்வேறு விலங்குகளை வேட்டையாடுவதையும், வீடுகளில் வளர்க்கப்படும் நாய், மாடு போன்ற விலங்குகளை பிடித்து உண்பதையும் பிரதேசவாசிகள் கண்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்கும், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கும்  ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் கருத்து  தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு...

தடம்புரண்ட தொடருந்து…!

மலையக மார்க்கதிலான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தொடருந்து  தெமோதரை தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதன் காரணமாக  மலையக மார்க்கதிலான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த தொடருந்தை வழித்தடமேற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை தகவல் தெரிவித்துள்ளது.

மாயமான பாடசாலைக்கு சென்ற மாணவன்…!

கண்டி பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவன் நேற்று (12) பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லையென மாணவனின் தாயார் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கட்டுகஸ்தோட்டை ரணவன வீதியை சேர்ந்த மொஹமட் முகரத் முஜாஹித் என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவன் நேற்று காலை 6.00 மணியளவில் பாடசாலைக்கு...

வாகன விபத்தில் மூவர் படுகாயம்..!

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரப்பாலம் பகுதியில் ஜீப் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒரே  குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டியிலிருந்து மட்டக்களப்பு பகுதிக்கு விடுமுறைக்காக வந்த  ஜீப் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. படுகாயமடைந்த  மூவரும் மகாஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகனம் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் நீண்ட தூரத்திற்கு பாய்ந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எசல பெரஹரவை முன்னிட்டு 11 நாட்களுக்கு மதுபானசாலைகள், இறைச்சிக் கடைகளுக்குப் பூட்டு..!

கண்டி - எசல பெரஹரவை முன்னிட்டு 11 நாட்களுக்கு மதுபானசாலைகளை மூடுமாறு கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, கண்டி நகர எல்லை மற்றும் அதனை அண்மித்துள்ள மதுபானசாலைகள் இன்று (10) முதல் எதிர்வரும் 11 நாட்கள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி எசல பெரஹர இன்றைய தினம் முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த காலப்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டின் ஒருசில பகுதிகளில் மழை!

மேல் மாகாணம்,சபரகமுவ மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தமது சமீபத்திய வானிலை முன்னறிவிப்பில்,நாட்டின்...
- Advertisement -spot_img