Friday, June 5, 2026
No menu items!

கிரிக்கெட்

இங்கிலாந்துடனான தொடரிலிருந்து விலகும்  ஜஸ்பிரிட் பும்ரா!

முதுகு தசைப் பிடிப்பு காரணமாக பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இருந்து விலகிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா இங்கிலாந்துடனான தொடரிலிருந்து விலகுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துடனான வெள்ளைப்பந்து கிரிக்கெட் (ஒருநாள், ரி20) தொடரில் விளையாடவிருக்கிறது. இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இந்திய மண்ணில் 05 ரி20,...

நிரோஷன் திக்வெல்லவின் தடைக் காலம் குறைப்பு..!

இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவின் 03 வருட கிரிக்கெட் தடை 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (11.12.2024) முதல் அவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தகுதி பெற்றுள்ளார். முடிவடைந்த லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது ஊக்கமருந்து உட்கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் (SLADA)...

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த இங்கிலாந்து!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5 இலட்சம் அதாவது அரை மில்லியன் ரன்களை குவித்த ஒரே அணி என்ற சாதனையை இங்கிலாந்து கிரிக்கெட் அணி பதிவு செய்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயனம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில்...

இந்திய வேகப்பந்து வீச்சாளர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் 2018ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக இந்தியாவுக்காகத் தனது இருபதுக்கு 20 சர்வதேச போட்டியில் அறிமுகமானார். அதே ஆண்டு, இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டியில் அறிமுகமானார். ஐ.பி.எல் தொடர்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு அணிகளில் விளையாடி உள்ளார். இந்நிலையில்,...

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி…!

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (17.11.2024) இடம்பெறவுள்ளது. பல்லேகலயில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்துள்ளது. இதன்படி நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளமை குறிப்பிட்டதக்கது.

இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி…

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தம்புள்ளையில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில்...

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் இதனை அறிவித்துள்ளது. இதன்படி சரித் அசலங்க தலைமையிலான குறித்த குழாமில் பெத்தும் நிசங்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, சதீர சமரவிக்ரம, நிஷான் மதுஷங்க, துனித் வெல்லாலகே,...

T20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மோதவுள்ள இலங்கை இந்திய அணி!

மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் இந்திய மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இந்திய அணி அரை இறுதிக்கான வாய்ப்பினை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் குறித்த போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாகும். அத்துடன் குறித்த இரு அணிகளும் இதுவரை 25...

கிரிக்கெட் விளையாடிய மாணவன் உயிரிழப்பு…!

கொட்டகலை கேம்பிரிட்ஜ் பாடசாலையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த மாணவனொருவர், வழுக்கி விழுந்து பாடசாலை கட்டடத்தில் தலைப்பகுதி மோதியதில் காயம் ஏற்பட்டு  உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை (04.10) பாடசாலை இடைவேளை நேரத்தில் சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். பிடி எடுப்பதற்காக ஓடிய குறித்த மாணவன், கால் தடுக்கி விழுந்துள்ளார். அவரின் தலைப்பகுதி பாடசாலை கட்டடமொன்றின் சுவரில் மோதியதால் தலைப்பகுதியில்...

300 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ள ரவீந்திர ஜடேஜா!

கான்பூரில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவத் டெஸ்ட் போட்டியில்  கலீத் அகமது-வின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ஓட்டங்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் என கிராண்ட் டபுள் சாதனையை எட்டிய வீரர் என்கிற பெருமையை ரவீந்திர ஜடேஜா பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கபில் தேவ் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img