Tuesday, September 29, 2026
No menu items!

கொலை

மாத்தறை துப்பாக்கிச் சூடு – கொலைக்கான ஒப்பந்தத்தை வழங்கிய நபரின் மனைவி கைது..!

மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான மூவரில் குறித்த கொலைக்கான ஒப்பந்தத்தை வழங்கியதாகக் கூறப்படும் நபரின் மனைவியும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் கந்தர மற்றும் தேவேந்திரமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்கு முன்னதாக தெஹிகெதர ரங்க என்ற நபர் துப்பாக்கிச்...

குடும்ப தகராறின் உச்சம் – மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்..!

குடும்ப தகராறு காரணமாக கணவன் ஒருவர் தனது மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் ரத்தோட்டை பொலிஸ் பிரிவின் கைகாவல இசுருகம பகுதியில் பதிவாகியுள்ளது. இன்று (3/22/2025) அதிகாலை 5.00 மணியளவில் இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட மனைவி மற்றும் கொலையைச் செய்ததாகக் கூறப்படும் கணவர் இருவரும் மாத்தளை வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்கு...

போதைப்பொருள் வாங்க பணம் கொடுக்காததால் தாயை அடித்துக் கொன்ற மகன்..!

போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் கொடுக்காத தாயை அடித்து கொலை செய்த மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் கொழும்பு, தெமட்டகொடை, ஆராமய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தெமட்டகொடை, ஆராமய பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய தாயொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று, சந்தேக நபரான மகன் போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் கேட்டு தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறின் போது...

அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான பொருட்கள் திருட்டு..!

இரத்தினபுரி - பெல்மடுல்ல, மீகஹகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவர் வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து சடலத்தை வாயிற்கதவுக்கு அருகில் உள்ள மரத்தில் கட்டி வைத்துவிட்டு பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பெல்மடுல்ல, மீகஹகொட பிரதேசத்தைச்...

கெசல்பத்தர பத்மே தலைமையில் இயங்கிவரும் முன்னாள் கமாண்டோக்களை கொண்ட குழு!

டுபாயில் தலைமறைவாகியுள்ள கெசல்பத்தர பத்மே என்ற திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் தலைமையில் முன்னாள் கமாண்டோ உறுப்பினர்களை கொண்ட குழுவொன்று இயங்கிவருவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் கமாண்டோ உறுப்பினர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போது இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது. கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்குப் பின்னர் வெளியாகிய,...

பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சபையில் சஜித்..!

நாட்டில் இடம்பெற்றுவரும் மிலேச்சத்தனமான கொலைகள் மற்றும் துப்பாக்கி பிரயோகங்கள் பொது மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன் சுற்றுலாத்துறைக்கும் பாதிப்பாக அமையும். அதனால்  கொலை கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டு மென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15/03/2025) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள்,...

நண்பர்களோடு மதுபானம் அருந்தியவர் நண்பர்களால் தாக்கப்பட்டு உயிரிழப்பு..!

மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து ஒருவர் மீது மூன்று பேர் பொல்லால் தாக்கியதில் நண்பன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (14/03/2025) பகல் மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சின்னவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் 3 பேரை கைது செய்துள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். வெல்லாவெளி சின்னவத்தை பக்கியெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த...

பட்டலந்தை சித்திரவதைக் கூடங்களில் இளைஞர்கள் கொல்லப்பட்டமைக்கு ரணில் காரணம்; இந்திராந்த சில்வா!

நாட்டில் கலவரங்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டமைக்கும் அப்போதைய இளைஞர் விவகார அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தொடர்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இளைஞர் விவகார அமைச்சராக இருந்த போது பட்டலந்தை உள்ளிட்ட சித்திரவதைக் கூடங்களில் இளைஞர்களைக் கொலை செய்ததாக இந்திராந்த சில்வா என்பவர் தெரிவித்துள்ளார்.  இளைஞர்களைக் கொலை செய்யும் நடவடிக்கைகளில் ரணில்...

நண்பரை கொடூரமாக கொன்ற நபருக்கு மரண தண்டனை..!

ஒருவரை மண்வெட்டியால் அடித்து கொலை செய்ததற்காக நீதிமன்றத்தில் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, பொலன்னறுவை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த, பிரதிவாதிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தனது நண்பரை மண்வெட்டியால் சாகும் வரை அடித்து கொலை செய்ததாக கூறப்படும் வழக்கில் நீதிமன்றத்தினால் குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்ட பிரதிவாதி ஒருவருக்கே...

கணேமுல்ல சஞ்சீவ கொலை – இன்று தொலைகாணொளி மூலம் வழக்கு விசாரணை..!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கை இன்று தொலைகாணொளி மூலம் விசாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவு கொழும்பு நீதிமன்றத்தின் பதிவாளருக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நீதிமன்றப் பதிவாளர் இது தொடர்பில் சிறை அதிகாரிகளுக்குத் தேவையான...
- Advertisement -spot_img

Latest News

தயாசிறி முன்வைத்த கோரிக்கை; நீதிமன்றம் நிராகரிப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான செயலாளராக தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு தயாசிறி ஜயசேகர முன்வைத்த கோரிக்கையை மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) நிராகரித்துள்ளது. தயாசிறி...
- Advertisement -spot_img