Tuesday, September 29, 2026
No menu items!

கொலை

வர்த்தகப் போட்டி கொலையில் முடிந்த பயங்கரம்..!

மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் ஹோட்டல் ஒன்றிற்கு முன்னால்  வீதி ஓரத்தில் பட்டா ரக வாகனத்தில் மரக்கறி வியாபாரம் செய்வோருக்கிடையே வியாபாரத்தில் ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து இடம்பெற்ற சண்டையில் வர்த்தகர் ஒருவர் மீது கத்தி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (03/03/2025) இரவு இடம்பெற்றள்ளதுடன் தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற...

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பியோட்டமா? – வெளியான அதிர்ச்சித் தகவல்..!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தினுள் கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்கு இந்நாட்டிலிருந்து திட்டமிட்ட, பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் இஷாரா செவ்வந்தி எனப்படும் பெண் கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. இஷாரா செவ்வந்திக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனைத்து வழிகளும் முடக்கப்பட்டிருப்பினும், அவர் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில்...

பத்தேகம பகுதியின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

பத்தேகம பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 27 ஆம் திகதி குறித்த பகுதியில் நடந்த இறுதிச் சடங்கொன்றின் போது இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதன்போது ​​கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள்...

முதியவர் வெட்டி கொலை – சந்தேக நபர் மடக்கி பிடிப்பு..!

கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மாத்தளை பிரதேச குற்றவியல் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (01/03/2025) மாலை மஹாவெல பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தோடம்கஸ்லந்த பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்த சந்தேக நபர் கடந்த பெப்ரவரி மாதம்...

ஆற்றில் மிதந்த மனித கால் – மக்கள் பதற்றம்..!

அக்குரஸ்ஸ, மாரம்ப கால்பல வெல்பாலம் அருகிலுள்ள பக்மீகஹ பகுதியில் உள்ள படகு முனையம் அருகே, மனிதனின் கால் ஒன்று நில்வலா ஆற்றில் மிதந்து கொண்டிருந்த போது நேற்று (28/02/2025) பகல் கண்டுபிடிக்கப்பட்டதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், வெலிஹேன பிரதேசத்தில் 76 வயதுடைய ஒருவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக நேற்று பகல் பொலிஸாருக்கு...

கொலையாளிகளுக்கு அரசாங்கம் அஞ்சுகின்றதா? – சபையில் சாணக்கியன்..!

கடந்த காலங்களில் கொலைகளிலும் மற்றும் சூழ்ச்சிகளிலும் ஈடுபட்ட குழுக்களுக்கு அரசாங்கம் அஞ்சுகின்றதா என்ற சந்தேகங்கள் நிலவுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28/02/2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு,செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளின் செலவு தலைப்புகளின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு – பெண் உள்ளிட்ட இருவர் கைது..!

மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 26 ஆம் திகதி புதன்கிழமை கணேமுல்ல சஞ்சீவ கொலையை திட்டமிட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள கெஹெல்பத்தர பத்மே என்பவரின் நெருங்கிய ஒருவர் மீதே  மினுவாங்கொடை பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. மினுவாங்கொடை - பத்தடுவன...

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை சமர்ப்பிப்பு!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணையை மேற்கொண்டு வரும் கொழும்பு குற்றப்பிரிவு, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியின் அதிகாரப்பூர்வ அறையில் தொடர்புடைய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அறிக்கையின்படி, நீதிமன்றம் காவல்துறைக்கு பல உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. அதன்படி, பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட...

தொடரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் – பழிதீர்க்கும் செயலா?

கெஹெல்பத்தர பத்மேவின் பாடசாலை நண்பர் ஒருவரை இலக்கு வைத்து நேற்று (26/02/2025) மினுவங்கொடை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். அதற்கமைய, கரந்தெனிய சுத்தா மற்றும் ஹீனடியன மஹேஷ் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என...

உஸ்வெட்டகெய்யாவ கடற்கரை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது!

உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 21 ஆம் திகதி உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, ராகம - வல்பொல பகுதியில் இந்தக் கொலைக்கான சதித்திட்டங்களை முன்னெடுத்தவரெனச் சந்தேகிக்கப்படும் ஒருவரை பமுணுகம...
- Advertisement -spot_img

Latest News

தயாசிறி முன்வைத்த கோரிக்கை; நீதிமன்றம் நிராகரிப்பு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான செயலாளராக தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு தயாசிறி ஜயசேகர முன்வைத்த கோரிக்கையை மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) நிராகரித்துள்ளது. தயாசிறி...
- Advertisement -spot_img