Monday, November 9, 2026
No menu items!

கொழும்பு

பேருந்து விபத்து; 14 பேர் காயம்!

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தொன்று, சேருநுவர - கந்தளாய் வீதியில், சேருநுவர கல்லாறு இராணுவ முகாமுக்கு அருகில் விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் சுமார் 14 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 14 பேர் சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலையில்...

இன்றைய நாளுக்கான வானிலை..!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடமேல் மாகாணத்திலும் கொழும்பு...

தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவைகள் அறிவிப்பு !

தைப் பொங்கல் பண்டிகை, சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை நாட்களில் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் இலங்கை ரயில்வே சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்துள்ளது. 2025 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதிகளில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை மற்றும் காங்கேசன்துறைக்கு ரயில்கள் இயக்கப்படும். கொழும்பு கோட்டை முதல் பதுளை வரை 7:30 PM, 10, 12,...

மீண்டும் சரிவை நோக்கி பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண் இன்று (9) மேலும் சரிவைச் சந்தித்துள்ளது. அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 142.65 புள்ளிகளால் சரிவடைந்தது. அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 15,811.36 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 4.1 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.   <!-- -->

தாமரை கோபுரத்திற்கு விஜயம் மேற்கொண்ட அநுர கருணாதிலக்க!

நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்க நேற்று கொழும்பு தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டார். அமைச்சருடன் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன மற்றும் அமைச்சின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகங்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். கொழும்பு தாமரை கோபுரத்தின் படி, நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் விசேட கூட்டம்...

இலங்கையில் HMPV வைரஸ் அறிகுறி ; நெருங்கும் பேராபத்து!

தற்போது சீனா முழுவதும் பரவி வரும் எச்.எம்.பீ.வீ வைரஸ் குறித்து நாட்டில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 20 வருடங்களாக உலகளாவிய ரீதியில் உள்ள பல நாடுகளில் இந்த வைரஸ்...

இன்றைய தங்க நிலவரம்..!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 212,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 195,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 26,500 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 24,438 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கல்வி மற்றும் உயர்கல்வித்துறைக்கு சலுகைகளை வழங்கக்கோரி போராட்டம் !

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்துக்குத் தடை விதித்து கோட்டை பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என காவல்துறையினர் கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைத்தனர். இதனைக் கருத்திற்கொண்ட நீதவான், இன்று பிற்பகல் ஒரு...

சிறப்பு ரயில் அட்டவணை வெளியானது..!

தை பொங்கல், சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை நாட்களில் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இலங்கை ரயில் திணைக்களம் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை மற்றும் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட ரயில் சேவை திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,...

உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற கண்காட்சி!

கொழும்பு இரத்தினகற்கள் கண்காட்சியில் 100 கோடி ரூபாய் பெறுமதியான பரிவர்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரத்தினகற்கள் மற்றும் ஆபரணக் கண்காட்சி வாரயிறுதி நாட்களில் கொழும்பு - உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதன்போது, குறித்த கண்காட்சியில் இரத்தினக்கல் வர்த்தகர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் அதிகளவில் பங்குபற்றினர். அதில் சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான கொள்வனவாளர்கள் கலந்துகொண்டு 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாகத்...
- Advertisement -spot_img

Latest News

பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து வீதியை கடந்த யானைகள்

கும்புக்கன் ஓயா அருகே வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியை கடக்கும் முன் பார்வையாளர்களை பார்த்து வணக்கம் அல்லது நன்றி செலுத்துவது போல் காட்சியளித்த காட்டு...
- Advertisement -spot_img