Sunday, April 26, 2026
No menu items!

சாரதி

இரு டிப்பர் வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

கொழும்பு - கண்டி வீதியில் கஜுகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை 03.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சாரதியால் கவனக்குறைவாக செலுத்தப்பட்ட டிப்பர் வாகனம் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ள...

அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி குடைசாய்ந்து விபத்து..!

பதுளை - பண்டாரவளை வீதியில் திக்கராவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (24/03/2025) காலை இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பதுளையிலிருந்து பண்டாவரளை நோக்கி அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில்...

சாலையைக் கடக்க முயன்ற ஒருவர் மீது கார் மோதி விபத்து; ஒருவர் பலி!

பாணந்துறை வடக்கு காவல் படைப் பகுதியில் உள்ள கோரக்கபாலவில் நடந்த விபத்தில் 64 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நேற்று (23) இரவு 11.30 மணியளவில் சாலையைக் கடக்க முயன்ற ஒருவர் மீது கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பாணந்துறை வடக்கு, கதுருதுவ பகுதியைச் சேர்ந்தவர். கோரகபாலா பகுதியில்...

போட்டி போட்டு ஓடும் தனியார் பேருந்துகள் – பீதியில் மக்கள்..!

யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில் போட்டி போட்டு ஓடும் தனியார் பேருந்துகளினால் பயணிகள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (23/03/2025) கீரிமலையிலிருந்து யாழ். நகர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் சாரதியும், காரைநகரிலிருந்து யாழ்.நகர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் சாரதியுமே போட்டி போட்டுக்கொண்டு பேருந்தை செலுத்தியுள்ளனர். இதில் கீரிமலையிலிருந்து யாழ். நகர் நோக்கிச் சென்ற...

எவ்வித அச்சமுமின்றி சடலத்தை வீதியில் விட்டுச் சென்ற நபர்..!

நேற்று (21/03/2025) காலை 11.45 மணியளவில், வெல்லம்பிட்டி பொலிஸ் எல்லைக்குட்பட்ட வெலேவத்த, ரம்யவீர மாவத்தைக்கு அருகில் முச்சக்கர வண்டியில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், உயிரிழந்த நபர் ஒருவரை வீதிக்கு அருகில் விட்டுச் சென்றுள்ளனர். அந்த இடத்திற்கு அருகில் அமைந்துள்ள வீட்டின் உரிமையாளரிடம், அந்த நபர் அதிகமாக மது அருந்திவிட்டு மயக்கமடைந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும்,...

சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மடக்கிப் பிடிப்பு; தப்பியோடிய சாரதி!

அனுமதிப்பத்திரம் இன்றி கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ள நிலையில் சாரதி தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று புதன்கிழமை (19) 12.15 மணியளவில் பளையில் இருந்து அச்சுவேலி நோக்கி மணல் கடத்திச் சென்ற டிப்பரை சாவகச்சேரி பொலிஸார் வழி மறித்தவேளை குறித்த டிப்பர் நிற்காமல் சென்றது. இதன்போது...

எல்ல வீதியில் மண்சரிவு !

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, எல்ல - வெல்லவாய வீதியின் 12ஆவது கிலோமீட்டர் கம்பத்திற்கு அருகிலுள்ள பகுதியில் நேற்று (13) மண் சரிந்து விழுந்ததால் வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில்  போக்குவரத்து பாதிக்கப்ப்டுள்ளது, குறித்த வீதியை சீரமைத்து மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் வரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார்...

தொடருந்து சமிக்ஞை அதிகாரிகளின் அசமந்தம் – ஏற்படவிருந்த பாரிய விபத்து!

கண்டி பிரதான தொடருந்து நிலையத்தில் கவனக்குறைவாகச் செயற்பட்ட தொடருந்து சமிக்ஞைகளைக் கையாளும் பணியாளர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பொடிமெனிக்கே தொடருந்து பயணித்தின் போது கடமையிலிருந்த இருவரும் உறங்கிய நிலையில், குறித்த தொடருந்து கண்டி தொடருந்து நிலையத்தின் 3ஆவது மேடையை சென்றடைந்தது. அந்த நேரத்தில் தொடருந்து சமிக்ஞைகள் உரிய முறையில் ஒளிரவில்லை...

மது போதையில் பேருந்து செலுத்திய சாரதி மடக்கி பிடிப்பு..!

மது போதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி ஒருவர் வெல்லவாய பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லவாய பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். தணமல்வில பகுதியிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, குறித்த...

லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு – வெளியான பின்னணி..!

கடுவலை பிரதேசத்தில் பொலிஸ் உத்தரவை மீறி தப்பிச் செல்ல முயன்ற லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, நுரைச்சோலையில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றை ஓட்டிச் சென்ற சாரதி, வத்தளையில் உள்ள தேநீர் கடைக்கு அருகில் லொறியை நிறுத்திவிட்டு தேநீர் அருந்துவதற்காக சென்றுள்ளார். இதன்போது சந்தேக நபரொருவர் குறித்த...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img