Wednesday, July 22, 2026
No menu items!

சுகாதார அமைச்சு

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை!

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அண்மைய நாட்களில் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் மாத்திரம் சுமார் 14,200 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அதிகரிப்புக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதும், புதிய திரிபுகள் பரவுவதும் காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. LF.7 மற்றும் NB.1.8...

வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை; வைத்திய அதிகாரிகள் சங்கம்!

நாடு முழுவதும் உள்ள பல வைத்தியசாலைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன், வலி ​​நிவாரணிகள் மற்றும் இன்சுலின் ஆகியவற்றிற்கும் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். "அதிக எண்ணிக்கையிலான மருந்துகளின் பற்றாக்குறைகள் வைத்தியசாலைகளில் காணப்படுகின்றன. கடந்த ஏப்ரல் மாத இறுதிக்குள்,...

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம்!

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது. டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 15 மாவட்டங்களில் 95 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 20,588 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்...

 நாட்டில் குழந்தைகள் தலசீமியா நோயால் பாதிப்பு..!

நாட்டில் 2,000 முதல் 2,500 குழந்தைகள் தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் 40 முதல் 50 வரையிலான குழந்தைகள் தலசீமியாவால் பாதிக்கப்படுவதாக அமைச்சின் தொற்று அல்லாத நோய்கள் பிரிவின் பணிப்பாளர் நிபுணர் வைத்தியர் சமிதி சமரகோன் தெரிவித்தார். இன்று உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய வைத்தியர்...

சுகாதார உத்தியோகத்தர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டம்!

சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. உடற்பயிற்சி தொடர்பான டிப்ளோமாதாரி ஆலோசகர் ஒருவரின் கீழ், வாரத்தில் 5 வேலை நாட்களிலும் இந்த உடற்பயிற்சி கூடத்தைச் செயற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.    

சுகாதார உத்தியோகத்தர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விசேட திட்டம்!

சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. உடற்பயிற்சி தொடர்பான டிப்ளோமாதாரி ஆலோசகர் ஒருவரின் கீழ், வாரத்தில் 5 வேலை நாட்களிலும் இந்த உடற்பயிற்சி கூடத்தைச் செயற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பான மரணங்கள்!

இலங்கையில் நாளாந்தம் 30 முதல் 35 வரையான, விபத்துகளுடன் தொடர்புடைய மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த சுகாதார அமைச்சின் தொற்றா நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சமிதா சிறிதுங்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, இலங்கையில் 10,000 முதல் 12,000 பேர் வரை...

அனைத்து அரச மருத்துவமனைகளையும்  டிஜிட்டல் மயமாக்க திட்டம்; நளிந்த ஜயதிஸ்ஸ!

நாட்டில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும்  டிஜிட்டல் மயமாக்குவதுடன்  குறுகிய காலத்தில் மக்களுக்கு உயர் தரமான சிகிச்சை சேவைகள் மற்றும் உயர்ந்த பராமரிப்பை வழங்குவதே சுகாதார அமைச்சு மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சுகாதார தகவல்...

கிராமிய வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர் சேவை..!

கிராமிய வைத்தியசாலைகளிலும் விசேட வைத்தியர்களின் சேவையை விரிவுபடுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது ஆதார வைத்தியசாலைகள் அல்லது அவற்றுக்கு அடுத்த தரத்திலான வைத்தியசாலைகளில் மாத்திரமே விசேட வைத்தியர்களின் சேவை காணப்படுவதாகவும் இதன் காரணமாக கிராமப்புற மக்களுக்கு விசேட வைத்தியர்களின் சேவையை இலவசமாகப் பெற்றுக் கொள்வதற்கு இயலாமல் போயுள்ளதாகவும் சுகாதார  பிரதியமைச்சர் டொக்டர் ஹங்சக விஜயமுனி தெரிவித்தார். இது...

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு..!

நாட்டில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் 115 பேர் எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இலங்கையில் பதிவாகியிருந்த மொத்த எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை 824 ஆகும். அவர்களில் 718 பேர்...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img