Wednesday, July 22, 2026
No menu items!

சுகாதார அமைச்சு

கொழும்பு மாவட்டத்தில் அதிக காசநோயாளர்கள் பதிவு..!

கடந்த வருடம் நாட்டில் காசநோயாளர்களின் எண்ணிக்கை 9,200 ஆகப் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவற்றில் 5,291 ஆண்கள் 3,259 பெண்கள், மற்றும் 250 குழந்தை நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கூடுதலாக கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 2035 ஆம் ஆண்டுக்குள் காசநோயாளிகளின் எண்ணிக்கை 90 சதவீதத்தாலும் காசநோயினால் ஏற்படும் இறப்புக்களை 95 சதவீதத்தாலும் குறைப்பதே...

சுகாதார அமைச்சிற்கு முன்பாக போராட்டம் – 27 பேர் கைது..!

அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளும் செயற்பாட்டை மட்டுப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இணை சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் ஒன்றியம் சுகாதார அமைச்சிற்கு முன்பாக முன்னெடுத்த சத்தியாகிரக போராட்டத்தின் போது 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் குற்றம் சுமத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் உள்ளிட்ட 27 பேர் கைதாகியுள்ளனர். இணை சுகாதார பட்டதாரிகளை...

பொரளை ஆயுர்வேத தேசிய மருத்துவமனையில் விரிவுபடுத்தப்பட்டுள்ள கட்டண சிகிச்சை சேவை!

பொரளை ஆயுர்வேத தேசிய மருத்துவமனையில் கட்டண சிகிச்சை சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது கட்டுமானத்தில் உள்ள 8 மாடி கட்டிடம் அந்த சேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டண சிகிச்சை பெறுவதற்கான உயர்தர வசதிகளுடன் கூடிய அறைகளின் எண்ணிக்கை 82 ஆகும். இதில் அறுவை சிகிச்சை அறைகள், மருந்து உற்பத்தி வசதிகள், பஞ்சகர்மா அலகுகள் மற்றும் யோகா பயிற்சி...

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் விசேட கவனம்..!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் தொடர் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (11/03/2025) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ‘‘தேயிலைச் சட்டத்தை...

தட்டுப்பாடின்றி மருந்துகள் விநியோகிக்கப்படும் – வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ..!

அரச வைத்தியசாலைகளுக்கு எவ்வித தட்டுப்பாடுமின்றி மருந்துகளை தொடர்ச்சியாக வழங்க உள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுகாதார அமைச்சில் மருந்து விநியோகம் தொடர்பில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சுகாதார மற்றும் மருந்து விநியோகம் என்பன இந்நாட்டு மக்களின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடைய...

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நாட்டில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் 2.2 மில்லியன் மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோய் காரணமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மாளிகாவத்தையில் உள்ள தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்ல தயாராகும் வைத்தியர்கள் – சஜித் எச்சரிக்கை..!

சுமார் 5000க்கும் அதிகளவான வைத்தியர்கள் வெளிநாடுகளில் வைத்திய சேவைக்கான தகுதிகளை பூர்த்தி செய்து, வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (06/03/2025) நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சின் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன்று நாட்டில் வைத்தியர்கள் பணியாற்றுவதற்கான உகந்த சூழல் இல்லை எனக் கூறிய...

மீண்டும் நாட்டில் உப்பு தட்டுப்பாடு..!

சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவால் உரிமங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் உப்பு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என அதன் தலைவர் கனக அமர தெரிவித்துள்ளார். உப்பு இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் இந்த மாதம் 28 ஆம்...

மருந்துப் பரிசோதனைக்காக ஆய்வகங்களை நிறுவ திட்டம்!

சுகாதார அமைச்சின் செயலாளர் (MOH), அனில் ஜாசிங்க, மருந்துப் பரிசோதனைக்காக அரசாங்கம் விரைவில் பல ஆய்வகங்களை நிறுவுவதற்கான திட்டங்களை அறிவித்தார். குறிப்பிட்ட புகார்களுக்கு மட்டும் பதிலளிப்பதை விட, செயலில் உள்ள சோதனையின் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். இலங்கையின் சுகாதார அமைப்பு மற்றும் மருந்து விநியோக செயல்முறைகள், நாடு சிறியதாக இருந்தாலும், விரிவானது என்பதை வலியுறுத்தி, மருந்து இறக்குமதி...

நாட்டில் போலி வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; சுகாதார அமைச்சு அறிவிப்பு!

நாட்டில் போலி வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவ்வாறான போலி வைத்தியர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரிகளினூடாக சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (07) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், நாட்டில்...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img