Wednesday, July 22, 2026
No menu items!

சுகாதார அமைச்சு

தேசிய திட்டத்துடன் இணங்க வேண்டும்-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ..!

எதிர்காலத்தில் சுகாதாரத் துறைக்கான நன்கொடைகள் அரசாங்கத்தின் தேசிய திட்டத்துடன் இணங்க வேண்டும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.  நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் ஜயதிஸ்ஸ, பல்வேறு உள்ளூர் பரோபகாரர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைகளை முறையாகப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்தார். “நன்கொடைகளை முறையாகப் பயன்படுத்த உத்தேசித்துள்ளோம். இனி வரும் காலங்களில்...

அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளம்-தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு..!

நாட்டில் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைத் தொடர்ந்து 15 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் அதி உயர் டெங்கு அபாயமிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இம்மாதம் 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 47 ஆயிரத்து 599 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த மாதம் சுமார்  3,178  டெங்கு...

இந்த ஆண்டு எலிக்காய்ச்சலால் 200 பேர் உயிரிழப்பு..!!

வடமாகாணத்தில் உள்ள பாலூட்டிகளின் இரத்த மாதிரிகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் பதிவாகியுள்ள எலிக்காய்ச்சல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இந்த மாதிரிகள் எடுக்கப்பட்டதாக அதன் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த மாதிரிகள் கால்நடை மருத்துவ திணைக்களத்தின் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களில் யாழ்.மாவட்டத்தில்...

அதி தீவிரமாக அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை..!

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 46,934 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். இதன்படி, மேல் மாகாணத்தில் 20,218 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 11,857 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு...

நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் சோதனையிடப்பட்ட போத்தல் நீர் விநியோக தொழிற்சாலை..!

தவறான தகவல் மூலம் பெறப்பட்ட காலாவதியான சுகாதார அமைச்சின் சான்றிதழுடன் போத்தல் நீர் விநியோகம் செய்த மாவனெல்ல ஹெம்மாதகம தொழிற்சாலையொன்றை நுகர்வோர் விவகார அதிகார சபையினர் சோதனையிட்டுள்ளனர். விநியோகத்திற்காக தயாரிக்கப்பட்ட பல்வேறு அளவுகளில் 3,000 பாட்டில்களை அதிகாரிகள் கைப்பற்றினர். தவறான ஒப்புதல்கள் மூலம் நுகர்வோரை தவறாக வழிநடத்தும் CAA சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் திட்டம் – இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு..!

தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் திட்டம் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. தொற்றாநோய் பிரிவைச் சேர்ந்த அதுல லியன பத்திரனவின் கூற்றுப்படி, நவம்பர் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் சுமார் 25,000 பேருக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் இடங்கள் பற்றிய தகவல்களை அருகிலுள்ள பிராந்திய சுகாதார அலுவலகத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள...

இன்சுலின் பற்றாக்குறைக்கு தீர்வு – சுகாதார அமைச்சு அறிவிப்பு..!

பற்றாக்குறையாக உள்ள இன்சுலின் வகையை அடுத்த நான்கு நாட்களுக்குள் இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. விநியோகப் பதிவு செயற்பாட்டில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இன்சுலினிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வழங்கல் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தற்போது அந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் முதல் தொகுதியாக...

சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக வத்சலா பிரியதர்ஷனி நியமனம்!

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளரான வத்சலா பிரியதர்ஷனி, சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவியில் இதுவரை காலமும் விசேட வைத்தியர் பாலித்த மஹிபால பணியாற்றி வந்தார்.

இஸ்ரேல் நடத்திய பாரிய வான்வழித் தாக்குதல் – 20 பேர் பலி..!

மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய பாரிய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் அதிகாரிகள் கூறுகின்றனர். உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 4 மணிக்கு முன்னறிவிப்பின்றி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு சிரேஷ்ட ஹெஸ்பொல்லா அதிகாரியைக் கொல்லும் முயற்சி என்று இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இடிபாடுகளை அகற்றவும், உடல்களை மீட்கவும் அவசரகால பணியாளர்கள்...

சுகாதார அதிகாரிகள் போன்று தோற்றமளித்து பணம் வசூலிக்கும் குழு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

சிரேஷ்ட சுகாதார அதிகாரிகள் போன்று தோற்றமளித்து பணம் வசூலிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குழு தொடர்பில் சுகாதார அமைச்சு சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விசேட எச்சரிக்கை விடுத்துள்ளது. தொலைபேசி, வாட்ஸ்அப் அல்லது பிற வழிகளில் நிதி கோர எந்த அதிகாரிக்கும் அதிகாரம் இல்லை என்று அமைச்சரகம் வலியுறுத்தியது. கணக்குகளிலோ அல்லது வேறு எந்த வழிகளிலோ பணத்தை மாற்றுவதன் மூலம்...
- Advertisement -spot_img

Latest News

ஐவரின் உயிரிழப்புக்கு காரணமான தீ விபத்து; மேலதிக விபரங்கள் வெளியாகின

ஹோமாகம கட்டுவான தொழிற்பேட்டையில் இடம்பெற்ற தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 9.45 மணியளவில் தீ...
- Advertisement -spot_img