Wednesday, November 18, 2026
No menu items!

செயற்கை நுண்ணறிவு

எலான் மஸ்கின் கால்களை முத்தமிட்ட அமெரிக்க ஜனாதிபதி!

உலக கோடீஸ்வர வர்த்தகர் எலான் மஸ்கின் கால்களை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முத்தமிடுவது போன்ற செயற்கை நுண்ணறிவு காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரச அலுவலகத்தில் இந்த காணொளி வெளியாகியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் அறிமுகமாகும் யானா!

வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு விரைவாக பதிலளிக்க, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ‘யானா’ என்ற செயற்கை நுண்ணறிவு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. www.srilankan.com என்ற இணையதளத்தில் உள்நுழைந்து இந்த வசதியைப் பெறுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கிறது. வலைத்தளத்தின் வலது பக்கத்தில் விமானப் பணிப்பெண்ணின் படம் காட்டப்படும் A.I. (AI) படத்தைக் கிளிக் செய்வதன் மூலம் கேள்விகளை இயக்க முடியும் என்று...

உலகளவில் AI-யில் சிறந்து விளங்கும் முதல் 10 நாடுகள்: AI தொழில்நுட்ப தரவரிசை..!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இன்று உலகை கணிசமாக மாற்றி வருகிறது. பொருளாதாரங்கள், வேலை சந்தைகள் மற்றும் சமூக இயக்கவியல் ஆகியவற்றில் ஒரு பெரிய மாற்றத்தை குறிக்கும் வகையில் AI தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. இந்நிலையில், Grand View Research மற்றும் Statista Market Insights ஆய்வுகளின்படி, AI சந்தை 36.6% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில்...

டீப்சீக் செயலியை தடைசெய்த நாடுகளுக்கு சீனா கடும் கண்டனம்..!

ப்சீக்(Deepseek) செயலிக்கு கட்டுப்பாடு விதித்துள்ள நாடுகளுக்கு சீனா(China) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ள நிலையில், அண்மையில் சீனாவும் டீப்சீக் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஏஐ செயலியை பயன்படுத்தும்போது தரவுகள் திருடப்படலாம், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என சில நாடுகள் அச்சம் கொண்டுள்ளன. டீப்சீக் செயலி இதனால்...

எக்ஸ் தளத்தின் Grok AI: புதிய செயலியை அறிமுகப்படுத்திய எக்ஸ் நிறுவனம்..!

எலான் மஸ்க்கின் எக்ஸ் தளம் தனது செயற்கை நுண்ணறிவு துறையில் புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Grok AI சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Grok AI என்ற புதிய செயலியானது, பயனர்களுக்கு ஒரு புதிய அளவிலான உரையாடல் மற்றும் படைப்பாற்றல் அனுபவத்தை வழங்குகிறது. Grok AI, பயனர்களுடன் இயற்கையான உரையாடலை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. படங்களை உருவாக்குதல், உரையை சுருக்குதல், கேள்விகளுக்கு பதிலளித்தல்...

AI தொடர்பான தேசியக் கொள்கையை ஆரம்பிக்கவுள்ள இலங்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான தேசியக் கொள்கையை வகுப்பதற்காக பொதுமக்களின் கருத்துக்களை சேகரிக்கும் நடைமுறையை அரசு தொடங்கியுள்ளது. டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்னவின் கூற்றுப்படி, கருத்துக்களை சமர்ப்பிக்க மார்ச் 14 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படும். இந்தக் கொள்கையை வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, இந்த செயல்முறையைத் தொடர்ந்து இறுதி வரைத் தயாரிக்கும் என்றும்...

மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் AI தொழிநுட்பம்…!

உலகளாவிய ரீதியில் செயற்கை நுண்ணறிவு  அதன் ஆதிக்கத்தை செலுத்திவருகிறது. சமூக வலைத்தளங்கள் உட்பட, மருத்துவத் துறை வரையில் அனைத்திலுமே தனது தாக்கத்தை செலுத்தி வருகிறது. தற்போது கல்வித் துறையிலும் AI நுழைந்துவிட்டது. சில மாணவர்கள் பரீட்சையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் எழுதுகிறார்கள். ஆனால், என்ன பதில் எழுதப்பட்டுள்ளது என்பதே சில நேரங்களில் தெரியாமல் இருக்கும். AI தொழில்நுட்பத்தின்...

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு நடைமுறைபடுத்த அமைச்சரவை அங்கீகாரம்…!

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான தேசிய மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. டிஜிட்டல் மாற்றப் பாதையில் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும், உலகளாவிய செயற்கை நுண்ணறிவில் இலங்கையால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய உத்திகள் தயாரிக்கப்பட்டு, செயற்கை நுண்ணறிவுக்கான ஒரு தளத்தை இலங்கையில்...

செயற்கை நுண்ணறிவு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் பங்கேற்புடன் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவை மாணவர் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த பாடசாலைகளில் 6ஆம் தரத்திலிருந்து 9ஆம் தரம் வரை பயிலும் மாணவர்கள் இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப நடவடிக்கைகளின் முடிவுகளின் அடிப்படையில், எதிர்காலங்களில் ஏனைய பாடசாலைகளிலும் இந்த...

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்..!

நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் வருடத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும், 5 வருடங்களுக்குள் நாட்டின் சகல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதே இதன் நோக்கமாகும் எனவும் அவர்...
- Advertisement -spot_img

Latest News

4.2 மில்லியன் பெறுமதியான ஏலக்காய் சட்டவிரோதமாக இறக்குமதி

4.2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஏலக்காயுடன் கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ. 4.2 மில்லியன் மதிப்புள்ள...
- Advertisement -spot_img