தடுப்பூசி பெற்றுக்கொண்ட 5 பாடசாலை மாணவர்கள் திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக வழங்கப்படும் HPV தடுப்பூசியை பாடசாலையில் செலுத்தியதைத் தொடர்ந்து 12 வயதுடைய ஐந்து பாடசாலை மாணவிகள் தலைவலி, வயிற்றுவலி மற்றும் மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்குருவத்தோட்ட வெனிவெல்பிட்டிய கனிஷ்ட கல்லூரியின் ஏழாம் தரத்தில் கல்வி பயிலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தடுப்பூசியைப் பெற்ற சிறிது நேரத்திலேயே சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மில்லேனிய பிரதேச சுகாதார பிரிவினர் (MOH) குறித்த பாடசாலையில் 26 மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். ஆனால் அவர்களில் ஐந்து பேருக்கு விரைவில் தலைவலி, வயிற்று வலி மற்றும் மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன.

நோய்வாய்ப்பட்ட மாணவர்கள் ஆரம்பத்தில் மில்லனியா MOH அலுவலகத்தின் அதிகாரிகளால் ஹல்தோட்டை பிராந்திய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தற்போது மாணவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐந்து சிறுமிகளும் வெனிவெல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அங்குருவத்தோட்ட பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here