Saturday, November 21, 2026
No menu items!

தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தலை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் செப்டம்பர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜி.குணசிறி உறுதிப்படுத்தியதன் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் தேர்தல் முறைப்பாடுகள்..!

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய சட்டமீறல் மற்றும் வன்முறை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 4,737 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து நேற்று மாலை வரையான காலப்பகுதியில் இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அதற்கமைய, நேற்று 156 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேர்தல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளில் 4,209 முறைப்பாடுகள்...

வவுனியாவில் 9000 சுவரொட்டிகள் பொலிஸாரால் நீக்கம்!

எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி பிரச்சாரத்திற்கான நாள் இன்று(18.09.2024) எனவே இன்றிலிருந்து தேர்தல் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான சுவரொட்டிகளை காட்சிப்படுத்துவது தேர்தல் சட்ட விதிமுறை மீறல் என இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் வவுனியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை நீக்கும் பணிகளை வவுனியா...

விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகம்: தேர்தல்கள் ஆணைக்குழு…!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல் சர்ச்சைத் தீர்வுப் பிரிவினால் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்கெடுப்பை நடத்துவதற்கும், தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வாக்கெடுப்பின் போது சட்ட விரோதமான செயற்பாடுகள் தொடர்பில் தெரிவிப்பதற்கும் இந்த தொலைபேசி இலக்கங்கள்...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 4,411 முறைப்பாடுகள்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 4,411 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளும், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 30க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. அதேநேரம், கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளில் 3,828 முறைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் அனுப்பி வைக்கப்பட்ட தேர்தல் வாக்குப்பெட்டிகள்..!

ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பெட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதி தேர்தல் அலுவலர்கள் உரிய வாக்குப்பெட்டிகளை வாக்குச் சாவடிகளுக்கு விடுவிப்பார்கள். இம்முறை மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளைப் பயன்படுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. குறித்த அட்டைப் பெட்டிகள்...

இன்று நடைபெறவுள்ள முக்கிய தேர்தல் கலந்துரையாடல்..!

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (17.09) இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (17.09) காலை தேர்தல் ஆணைக்குழு வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையே இடம்பெறும் முதலாவது சந்திப்பு இதுவாகும். சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு (ANFRAL)...

கள்ள வாக்களிப்பில் ஈடுபடும் நபர்களுக்கு அமுலுக்கு வரும் தண்டனை:தேர்தல் ஆணைக்குழு..!

ஜனாதிபதித் தேர்தலில் கள்ள வாக்களிப்பில் ஈடுபடும் நபர்களுக்கு 2023 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம், ஒரு வருடகால சிறை தண்டனையும் 02 இலட்சம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் அதிகமான கள்ள வாக்குகளை அளிக்க சிலர் முற்படக் கூடுமென பலக் கட்சிகள் தேர்தல்களை ஆணைக்குழுவிடம்...

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு…!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவிடக்கூடிய அனுமதிக்கப்பட்ட தொகை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. காலி மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். எல்பிட்டிய...

இரண்டாவது விருப்பு வாக்கை எண்ணுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தல்…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 50 வீத வாக்குகளை எந்தவொரு கட்சியும் பெற்றுக்கொள்ளாது இரண்டாவது விருப்பு வாக்கை எண்ணும் சூழ்நிலை ஏற்பட்டால் கோடி கணக்கில் நிதி செலவாக வாய்ப்புள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித்...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img