Friday, November 20, 2026
No menu items!

தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்ற தேர்தலைத் திட்டமிடுவது தொடர்பில் கலந்துரையாடல்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலைத் திட்டமிடுவது தொடர்பில் கலந்துரையாட நாடாளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று தேர்தல் ஆணைக்குழுவுக்குச் சென்றிருந்தனர். வரவு செலவு திட்ட விவாதத்தின் போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமைகளுக்கு இடையூறு இல்லாமல் நிறைவேற்ற அனுமதிக்கும் வகையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்குமாறு எதிர்க்கட்சி பிரதிநிதிகள் ஆணைக்குழுவை வலியுறுத்தினர். அரசாங்கம் அதன்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் மகஜர் கையளிப்பு..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனுக்கான திகதி அறிவிப்பதற்கு முன்பு தேர்தல் ஆணைக்குழு சகல அரசியல் கட்சி செயலாளர்களையும் சந்திக்க வேண்டும் என்று கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று (2/13/2025) மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது? – பிமல் ரத்நாயக்கவின் அறிவிப்பு..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது அல்லது நான்காவது வாரத்தில் நடத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமென தான் நம்புவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான வரைவு மசோதாவை அனைத்துக் கட்சிகளும் கூட்டாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் பலருக்கு எதிராக வழக்கு..!

கடந்த பொதுத் தேர்தலில் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 74 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 800க்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான நடவடிக்கைகள்...

வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

பாராளுமன்றத் தேர்தலுக்கான செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பான கோப்புகளை விரைந்து முடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. செலவு அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததுடன், அந்தக் காலம் முடிவடைந்த போதிலும், ஒரு வேட்பாளர் குழு வருமான அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருமானம் மற்றும் செலவு அறிக்கையை...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்..!

கடந்த பொதுத் தேர்தலில் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பிலான தகவல் அடங்கிய ஆவணத்தை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்துறை நிலையங்களுக்கு அனுப்புமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்பின்னர், காவல்துறையினரால் உரிய நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற...

செலவின அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்களின் பெயர்கள் பொலிஸாரிடம்..!

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவின அறிக்கைகளை வழங்காத வேட்பாளர்களின் பெயர்களை பொலிஸாரிடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களின் பெயர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு அது தொடர்பான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வழங்குவதற்கான...

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக மனோ கணேசன் , நிஸாம் காரியப்பர் ,சுஜீவ சேனசிங்க, மொஹம்மட் இஸ்மாயில் முத்து மொஹம்மட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் பொதுச் செயலாளரால் இந்த பெயர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தேர்தல் பிரசார செலவுகள் உட்பட வருமானம் மற்றும் செலவு அறிக்கை சமர்ப்பிக்க காலகெடுப்பு..!

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது தேர்தல் பிரசார செலவுகள் உட்பட வருமானம் மற்றும் செலவு அறிக்கையை டிசம்பர் 06 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 06 இன் படி, தேர்தல் முடிவுகள்...

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்…!

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அனைத்து வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் அனைத்து செலவு அறிக்கைகளையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்...
- Advertisement -spot_img

Latest News

இலங்கைக்கு கடத்தவிருந்த 71 கிலோ ஹெராயின் இந்தியாவில் பறிமுதல் 

இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்த 71.24 கிலோகிராம் ஹெராயினை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) பறிமுதல் செய்துள்ளதோடு, இது தொடர்பில் சென்னையில் இரண்டு...
- Advertisement -spot_img