Tuesday, July 28, 2026
No menu items!

தேர்தல்

மட்டக்களப்பில் வேட்பு மனுதாக்கலில் பெண்களுக்கான சரியான இடம் ஒதுக்கவில்லை; மனாஸ் மக்கீன்…

மட்டக்களப்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் பெண்களுக்கு சரியான முறையில் ஒதுக்கவில்லை. அதேவேளை உள்ளக ஜனநாயத்தை மதிக்க கூடிய அரசியல்வாதிகள் மிகவும் குறைவு என்பதுடன்,  எதிர் தரப்பினருக்கு கட்சியில் போட்டியிடுபவர்களுக்கு அல்லது ஒரே கட்சியல் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு எதிராக அதிகளவில் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெறுப்பு ஊட்டக்கூடிய சேறுபூசும் நடவடிக்கையில்...

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு…

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்றையதினம் மாலை 4 மணியளவில் வெளியிடப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபனத்தினை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வைக்க முதற் பிரதியினை கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன் பெற்றுக்கொண்டார். இதன்போது வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

செலவு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு…!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு செலவு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை (13.10) பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைகிறதென்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை 8 பேர் மட்டுமே செலவு அறிக்கை அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

நான் தமிழ் அரசு கட்சியில் இருந்து விலகவில்லை; மாவை சேனாதிராசா…!

இலங்கை தமிழ் அரசு கட்சியில் சிலரின் தன்னிச்சையான முடிவுகளை நான் ஏற்கவில்லை. அதனால் தேர்தல் அரசியலில் இருந்து விலகியிருக்க தீர்மானித்து, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலிருந்து விலகி இருக்கிறேன் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்து சென்று தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் அரசு கூட்டணியினர்...

அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்றுடன் நிறைவு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்க வேண்டுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் சில குறைபாடுகள் காரணமாக அஞ்சல் வாக்குகளுக்கு விண்ணப்பிக்காதது அல்லது விண்ணப்பங்களை...

யாழ் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக 45 முறைப்பாடுகள் பதிவு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக இதுவரை 45 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (19.09.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக இதுவரை 45 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அனைத்தும் வன்செயல்கள் அல்லது வன்முறைகள் அற்ற...

அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது;தேர்தல்கள் ஆணைக்குழு!

ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு காலத்தின்போது எதிர்பாராத வானிலை மாற்றங்கள் காரணமாக ஏற்படும் அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனர்த்த நிலைமைகள் ஏற்படக்கூடுமென சந்தேகிக்கப்படும் மாவட்டங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று 20ஆம் திகதி முதல் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை வளிமண்டலவியல்...

ஜனாதிபதித் தேர்தலில் பங்கேற்கும் வாக்காளர்களுக்கான விரிவான வழிகாட்டுதல்கள்!

செப்டம்பர் 21, 2024 அன்று நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பங்கேற்கும் வாக்காளர்களுக்கான விரிவான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதால், வாக்காளர்கள் ஒரு வேட்பாளருக்கு தங்கள் முதல் விருப்பத்தைக் குறிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். இரண்டு கூடுதல் வேட்பாளர்களுக்கு அவர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வுகள். வாக்களிக்க, வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளரின் பெயர்...

வடக்கு கிழக்கு மக்கள் தெளிவாக உள்ளனர் ;டக்ளஸ் தேவானந்தா!

தேர்தலைப் புறக்கணிப்பதன் ஊடாகவோ அல்லது பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதன் ஊடாகவோ கடந்த காலங்களில் என்ன கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் சிந்திக்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அம்பாறை - காரைத்தீவு பகுதியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தேர்தல்...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 4,411 முறைப்பாடுகள்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 4,411 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளும், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 30க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. அதேநேரம், கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளில் 3,828 முறைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img