தொடருந்துகளுடன் மோதி காட்டு யானைகளுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கான திட்டமொன்றை வனஜீவராசிகள் திணைக்களம் தயாரித்துள்ளது.

சுற்றாடல் அமைச்சு, தொடருந்து திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆகியவற்றின் பங்குபற்றுதலுடன் இந்தத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி, கல்ஓயா தொடருந்து நிலையத்திலிருந்து ஹிங்குராக்கொடை தொடருந்து நிலையம் வரையில் காட்டு யானைகள் அதிகளவில் விபத்துக்கு உள்ளாகக் கூடிய 7 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன்படி, அந்தப் பகுதிகளில் உள்ள மலைப்பாங்கான மண் மேடுகளை அகற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொடருந்து இயந்திர சாரதிகள், தொடருந்து நிலைய முகாமையாளர்கள், பொறியியலாளர்கள் மற்றும் உதவி இயந்திர சாரதிகளுக்கு இந்தத் திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளது.

காட்டு யானைகள் தொடருந்து மார்க்கத்தைக் கடக்கும் இடங்களில் உள்ள பெயர்ப் பலகைகளும் புதுப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்தத் திட்டத்தின் கீழ், குறித்த பகுதியில் தொடருந்து மார்க்கத்தின் இருபுறமும் 10 முதல் 20 மீற்றர் வரையான உயரம் கொண்ட மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் தொடருந்து மார்க்கத்தின் இருபுறமும் உள்ள காட்டு யானைகளைத் தொடருந்து இயந்திர சாரதிகள் தூரத்திலிருந்து பார்க்க முடியும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here