Wednesday, July 29, 2026
No menu items!

தொலைத்தொடர்பு

ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ்-க்கு வரித்தேர்வுகள் விதிப்பு- TRC!

மொபைல் போன் பயனர்களுக்கு இணைய பயன்பாட்டிற்கு 20.3% வரியும், வழக்கமான குரல் அழைப்புகளுக்கு 38.4% வரியும் விதிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRC) தெரிவித்துள்ளது. பொது நிதிக் குழுவின் (COPF) கூட்டத்தின் போது இந்த தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டது. ப்ரீபெய்ட் மொபைல் சேவைகளைப் பயன்படுத்தும் நுகர்வோர் மீதான பயனுள்ள வரி குறித்து குழுவின் தலைவர் டாக்டர் ஹர்ஷ டி...

பிலிப்பைன்ஸில் கல்மேகி சூறாவளி: 58 பேர் பலி!

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய “கல்மேகி” என்ற சூறாவளியால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 58 பேர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன மற்றும் பல வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சூறாவளி தாக்கத்தால் 180க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும்,...

100 தகவல் தொடர்பு கோபுரங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானம்!

இலங்கையில் பலவீனமான தொலைத்தொடர்பு இணைப்புகள் உள்ள பகுதிகளை உள்ளடக்கும் வகையில் 100 தகவல் தொடர்பு கோபுரங்களை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார துணை அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். கிராமப்புறங்களில் பலவீனமான சமிக்ஞை பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக தொடர்பு கோபுரங்கள் கட்டப்பட உள்ளதாக துணை அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். ஒரு தகவல் தொடர்பு...

தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து கீழே வீழ்ந்து ஒருவர் பலி..!

வவுனியா- மகாறம்பைக்குளம் பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து கீழே வீழ்ந்து நபர் ஒருவர் உயிரிழந்தார். குறித்த சம்பவம் நேற்று (02/02/2025) பதிவாகியுள்ளது. அநுராதபுரம் - நிக்கவரெட்டிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறித் திருத்தப்பணிகளை முன்னெடுத்துவந்த ஊழியர் நிலைதடுமாறி கீழே வீழ்ந்துள்ளார். இதன்போது படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

TRCSL பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) எச்சரிக்கை விடுத்துள்ளது, சமூக ஊடகங்களில் பரவும் மோசடியான குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. ஜனாதிபதியால் 1000 ரூபா நிதியுதவி வழங்கப்படுவதாக போலியான செய்திகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த ஏமாற்றுச் செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் எந்தவொரு...

ஜனாதிபதியின் பிரதம ஆலோசகராக கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய நியமனம்!

டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதம ஆலோசகராக கலாநிதி ஹன்ஸ் விஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெள்ளிக்கிழமை (1) தெரிவித்துள்ளது. தொலைத்தொடர்பு வர்த்தகத்தின் CEO மற்றும் குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான Dr Hans Wijayasuriya, இலங்கை அரசாங்கத்தினால் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதம ஆலோசகராக ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் பதவிக்கு அழைக்கப்பட்டதாக Axiata...

தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமத்தை வழங்கிய TRCSL!

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) Starlink Lanka (Private) Limitedக்கு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமத்தை வழங்கியுள்ளது. இலங்கையில் செய்மதி அகன்ற அலைவரிசை சேவைகளை வழங்குவதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக TRCSL அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் 17பி பிரிவின் கீழ் இந்த உரிமம் வழங்கப்பட்டதாக தெரிவித்த TRCSL மேலும் கூறியது, இது 2024...

உயர்நீதிமன்றின் தீர்மானத்தை பாராளுமன்றில் அறிவித்த சபாநாயக்கர்!

இலங்கை தொலைத்தொடர்பு திருத்தச் சட்டமூலத்தின் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் இன்று பாராளுமன்றில் அறிவித்தார். இந்த சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்றும் அவை பாராளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அந்த சரத்துகள் திருத்தப்பட்டால் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img