Monday, July 20, 2026
No menu items!

நாடாளுமன்ற உறுப்பினர்

விபத்தில் சிக்கினாரா ரணில்? – பிமல் ரத்நாயக்கவின் சர்ச்சைக்குரிய கருத்து..!

பெராரி காரை செலுத்துவதற்கான வாகன அனுமதிப்பத்திரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்த  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீதிவிபத்தில் சிக்குண்டுள்ளார் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அல்ஜசீராவிற்கு ரணில்விக்கிரமசிங்க வழங்கிய பேட்டி குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பெராரி வாகனங்களை செலுத்துவதற்கான வாகன அனுமதிப்பத்திரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தவரை அல்ஜசீரா இடித்து...

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன..!

களுத்துறை மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி நிறுவனங்களில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று (3/7/2025) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று (3/7/2025) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன...

வைத்திய துறையில் இடைநிலை ஆளணியொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்; MP. அர்ச்சுனா தெரிவிப்பு!

வைத்திய துறையில் இடைநிலை ஆளணியொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமெனக் கோரி யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார். கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அல்லது அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாகப் பெருமளவான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். வைத்தியர்கள் மாத்திரமல்ல தாதியர்களும் நாட்டிலிருந்து வெளியேறினர். எமது நாட்டை...

தையிட்டி விகாரை தொடர்பில் அரசாங்கத்தின் பதில் என்ன? கேள்வி எழுப்பிய MP. சிறிதரன்!

தையிட்டி விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்குமாயின் அதற்காக அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி எழுப்பினார். வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அவர் இந்த கேள்வியை முன்வைத்தார். அத்துடன் தங்களின் காணியைக் கோரி போராட்டங்களை முன்னெடுத்து வரும் காணி உரிமையாளர்களுக்கு அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்...

வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பிற்கு இராணுவத்தினரே காரணம்; MP.கஜேந்திரகுமார்!

வடக்கில் உள்ள போதைப்பொருள் பாவனைக்கு முழு பொறுப்பும் இராணுவத்தினரையே சாரும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் பிரச்சினை ஏற்பட்டால் இராணுவ முகாம்களில் சென்று ஒழிவதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாடளாவிய ரீதியில் மக்கள் தொகையை விடவும் மதுபான...

உரத்த குரலில் கத்திய அர்ச்சுனா – இன்றும் சபையில் சலசலப்பு..!

ஆளும் கட்சிக்கு ஒரு நீதி எனக்கு ஒரு நீதியா என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினார். இன்றைய (05/03/2025) நாடாளுமன்ற அமர்வில் தனது கருத்தை முன்வைக்க நேரம் வழங்கப்படாமை குறித்து கேள்வியெழுப்பும் சந்தர்ப்பத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “ஆளும் கட்சி முன்வைத்த கருத்து தொடர்பில் தனது கருத்தை தெரிவிப்பதாகக் கூறி இராமநாதன் அர்ச்சுனா ஒரு...

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு கூறிய ரவிகரன் எம்.பி..!

கடற்றொழில் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் குழு நிலை விவாதத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைத் தடுப்பதற்கு முழுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இந்தியாவை தவிற வேறு நாட்டிற்கு அனுமதி கிடையாது – அடைக்கலநாதன் எம்.பி..!

வடக்கில் இந்தியாவை மீறி எந்தவொரு நாட்டின் தலையீட்டையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். சீனா, வடக்கிலே என்ன அர்த்தத்தோடு மீனவர்களை நாடுகிறது எனவும் அவர் கேள்வியெழுப்பினார். இன்று (05/03/2025) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த கால அரசாங்கங்கள் செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டும் நிலைமை இருக்காமல், உங்களை நம்பி...

மின் கட்டணம் தொடர்பில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார் மரிக்கார்..!

“76 ஆண்டுகால சாபம்” பற்றி தொடர்ந்து பேசாமல், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை செயல்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், இலங்கையில் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கத் தவறியதற்காக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். தெற்காசியாவிலேயே இலங்கையில் அதிக மின் கட்டணம்...

மட்டக்களப்பில் அதிகரித்துவரும் வாள் வெட்டு சம்பவங்கள்; தீர்வுகாண வேண்டுமென எம்.பி.சாணக்கியன் கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பில் விரைவில் தீர்வுகாணப்பட வேண்டுமென இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் குறித்த விடயத்தினை முழுமையாக முன்வைக்க முடியாத வகையில் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. நாடாளுமன்ற...
- Advertisement -spot_img

Latest News

நாளை முதல் முட்டை விலை அதிகரிப்பு – வெள்ளை ரூ.41, சிவப்பு ரூ.42

நாளை (20) முதல் வெள்ளை முட்டை ஒன்றின் விற்பனை விலை ரூ.41 ஆகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை ரூ.42 ஆகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை...
- Advertisement -spot_img