Friday, November 20, 2026
No menu items!

நாடாளுமன்ற உறுப்பினர்

நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றப்படுவாரா அர்ச்சுனா எம்.பி ? –  எச்சரித்த பிரதி சபாநாயகர்..!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றில் நேற்று வெளியிட்ட கருத்துக்கு பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். நேற்றைய தினம் சிறப்புரிமை கேள்வியை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சபாநாயகரும், நாடாளுமன்ற நிர்வாகமும் வெட்கமடைய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் (2/6/2025) நாடாளுமன்றில் கருத்துரைத்த எதிர்க்கட்சி தலைவர் சஜித்...

தையிட்டி விகாரையை இடிக்க முடியாது என்ற MP.அர்ச்சுனா இன் கருத்துக்கு எதிர்ப்பு!

தையிட்டி விகாரையை இடித்து அகற்றாமல் அந்த காணியின் உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணி வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்த கருத்துக்கு, வட மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் முரளிதரன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், தையிட்டி...

அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாத ஏறாவூர் வைத்தியசாலை – மொஹமட் சாலி நளீம்..!

ஏறாவூர் வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்ட போதிலும் அங்கு இதுவரையில் அடிப்படை வசதிகள் கூட பூர்த்தி செய்யப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஏறாவூர் வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்ட போதிலும், கிராமிய வைத்தியசாலைக்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலைமைதான் அங்கு...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி தகவல்..!

இன்று (05) முதல், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உணவுக்காக 2,000 ரூபாய் பணத்தை செலுத்த வேண்டும். பாராளுமன்றத்தில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு இந்த மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்தாலும், இந்த மாதத்திற்கான பாராளுமன்றம் அமர்வு இன்று கூடியதால், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உணவுக்கான குறித்த கட்டணத்தை செலுத்த வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவிற்காக...

அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்காது; நலிந்த ஜயதிஸ்ஸ!

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவது முன்னுரிமை அல்ல என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை ஊடக சந்திப்பில் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய ஜெயதிஸ்ஸ, "அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்காது" என்று மீண்டும் வலியுறுத்தினார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உதவுவதற்கான திட்டங்கள் இருந்தாலும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போலவே அவர்களும் தங்கள்...

பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மீது மனு தாக்கல்!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்க உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுகா பெரேரா சமர்ப்பித்தார். அமைச்சர் ஆனந்த விஜேபால, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.   <!-- -->

தேசிய மக்கள் சக்தியின் தொடர்பாடல் அலுவலகம் திறந்து வைப்பு..!

தேசிய மக்கள் சக்தியின் மேலும் ஒரு பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று (02/02/2025) யாழ்ப்பாணம் கோப்பாய் வீதியில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், எஸ்.ஸ்ரீ. பவானந்தராஜா, ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், கட்சி உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். மக்களின் நலன் கருதி அவர்களின் தேவைகளை...

MP அர்ச்சுனா உள்ளிட்ட 5 பேருக்கு தடை கோரிக்கை நிராகரிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட தடை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அங்கு போராட்டங்கள் மேற்கொள்ளப்படலாம் எனக் கருதி, குறித்த 5 பேருக்கு எதிராக தடைவிதிக்கக் கோரி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் மனுவொன்று நேற்று...

மாவை.சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய சிறீதரன் MP!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் அஞ்சலி செலுத்தினார். நேற்று முன் தினம், சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்றிரவு உயிரிழந்திருந்த நிலையில், வைத்தியசாலையின் நிருவாக நடைமுறைகளைப் பின்பற்றி இன்று அதிகாலை அவரது...

MP அர்ச்சுனா இராமநாதன் கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அனுராதபுரத்தில் காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, யாழ்ப்பாணத்தில் வைத்து விசேட காவல்துறை குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார் . இதேவேளை அவரை அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.  
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img