Friday, June 5, 2026
No menu items!

பாகிஸ்தான்

சார்க் செயலிழந்த நிலையில் புதிய பிராந்திய கூட்டமைப்பை உருவாக்க பாகிஸ்தான்-சீனா-பங்களாதேஷ் பேச்சுவார்த்தை!

தற்போது செயல்படாத தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தை (சார்க்) மாற்றக்கூடிய ஒரு புதிய பிராந்திய அமைப்பை நிறுவுவதற்கான திட்டத்தில் பாகிஸ்தானும் சீனாவும் செயல்பட்டு வருகின்றன. பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் இணைப்புக்கு ஒரு புதிய அமைப்பு காலத்தின் தேவை என்று இரு தரப்பினரும் உறுதியாக நம்புவதால், இஸ்லாமாபாத் மற்றும் பெய்ஜிங் இடையேயான பேச்சுவார்த்தைகள் இப்போது ஒரு மேம்பட்ட...

பாகிஸ்தானில் பாடசாலை பேருந்து மீது குண்டுவெடிப்பு தாக்குதல்..!

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பாடசாலை பஸ்ஸினை  இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பு  தாக்குதலில் நான்கு பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளனர். குஸ்டார் மாவட்டத்தில் பாடசாலை பஸ்ஸை குறிவைத்து ஜீரோபொயின்ட் என்ற பகுதியிலே இந்த  குண்டுவெடிப்பு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதேவேளை கொல்லப்பட்டவர்களின் உடல்களையும் காயமடைந்தவர்களையும் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் காயமடைந்தவர்களை குவட்டா கராச்சிக்கு கொண்டு...

பாகிஸ்தானில் 11 மில்லியன் மக்கள் பஞ்சத்தால் பாதிப்பு!

பாகிஸ்தானில் 11 மில்லியன் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வில், பாகிஸ்தானில் பலர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், பலுசிஸ்தான், சிந்து மற்றும் கைபர் பக்துன்க்வாவில் உள்ள 22 சதவீத மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறார்கள் என்றும்,...

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கவுள்ள சீனா..!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலைத் தொடர்ந்து, சீனா தனது ஐந்தாம் தலைமுறை J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான்  சீனாவிடமிருந்து முதல் முப்பது J-35A ஜெட் விமானங்களைப் பெறவுள்ளது.  இதேவேளை பாகிஸ்தானுக்கு சீனா தனது போர் விமானங்களை  50% தள்ளுபடியுடன் வழங்கவுள்ளதுடன் எளிதாக கட்டணம் செலுத்தும்  முறையிலும்...

பாகிஸ்தானுக்குள் பாயும் நீர் ஓட்டத்தை தடுக்க ஆப்கானிஸ்தான் அணை கட்டத் திட்டம்..!

ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் நீர் ஓட்டத்தை தடுக்க ஆப்கானிஸ்தான் அரசு அணை கட்டத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் துணை நதிகளின் நீர் ஓட்டத்தின் குறுக்கே புதிய அணைகளைக் கட்ட ஆப்கான் அரசு தயாராகி வருவதாக பலூச் ஆதரவாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: ”இது பாகிஸ்தான் முடிவின் தொடக்கம்....

IPL தொடரை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்..!

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நேற்று மாலை அமுலுக்கு வந்த போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த மாதத்திலேயே மீண்டும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தொடங்கியுள்ளது. புதிய சூழ்நிலையில் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அலுவலகப் பொறுப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் இந்தியன் ப்ரீமியர் லீக் நிர்வாகக் குழு...

இந்தியா – பாகிஸ்தானை பாராட்டிய ட்ரம்ப்..!

போர் நிறுத்தத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் உறுதியாக இருப்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது , இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலிமையான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த சண்டை பலரின் மரணத்திற்கும் அழிவுக்கும் வழிவகுத்திருக்கலாம். மில்லியன் கணக்கான நல்ல மற்றும் அப்பாவி...

இந்தியா தாக்குதல்களை நிறுத்துமாயின் நாமும் தாக்குதல்களை நிறுத்துவோம் – பாகிஸ்தான்!

இந்தியா தாக்குதல்களை நிறுத்துமாயின் தாமும் எதிர்த் தாக்குதல்களை நிறுத்துவதற்குத் தயாராகவுள்ளதாகப் பாகிஸ்தானின் துணை பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான இஷாக் தார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோயிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை பொறுமையை இழந்ததால்தான் தாக்குதலை தொடங்கினோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் வான் எல்லை மூடப்பட்டது..!

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்களை  நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த மோதல்...

இந்தியா – பாகிஸ்தானை பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

இருதரப்பு தாக்குதல்களை உடனடியாக நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான், இந்தியா இடையே மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக, ஜி7 நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உயர் பிரதிநிதிகள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளனர். இந்தியாவும்,...
- Advertisement -spot_img

Latest News

விடுதலை புலிகள் பாடல் மற்றும் கைது தொடர்பில் பொலிஸார் விளக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் பாடல்களைப் பாடியதற்காக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள்...
- Advertisement -spot_img