Friday, June 5, 2026
No menu items!

பாகிஸ்தான்

ஐ.பி.எல் தொடர் பற்றி வெளியான அறிவித்தல்..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை அடுத்து ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஃப்;ளே ஒஃப் போட்டிகள் உட்பட 16 போட்டிகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளன. குறித்த போட்டிகளை நடத்துவதில் நிச்சயமற்ற தன்மை...

அரபிக்கடல் முழுவதையும்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இந்திய கடற்படை ..!

ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 36 மணி நேரத்தில் எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளதோடு  பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய இராணுவம் முறியடித்து வருகிறது. இந்நிலையில் அரபிக்கடல் முழுவதையும் இந்திய கடற்படை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதோடு  துறைமுகங்கள், கடற்பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி கொடுக்கவும்  இந்திய கடற்படை...

உலக வங்கியிடம் கூடுதல் கடன் கோரிய பாகிஸ்தான் அரசு !

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் உலக வங்கியிடம் கூடுதல் கடன் விடுக்கக் கோரி பாகிஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தானின் பொருளாதார விவகாரப் பிரிவு வெளியிட்ட பதிவில், “எதிரிகளால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதால், சர்வதேச கூட்டாளிகளிடம் கூடுதல் கடனை பாகிஸ்தான் கோருகிறது. அதிகரித்து வரும் போர் மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியில், சர்வதேச...

பாகிஸ்தான் ஏவிய ட்ரோன் தாக்குதலை முறியடித்தது இந்தியா..!

இந்தியா மீது பாகிஸ்தான் 50க்கும் மேற்பட்ட ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. இந்த ட்ரோன் தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது. இந்த தாக்குதலானது உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், நக்ரோட்டா மற்றும் பதான்கோட் பகுதிகளில் நடத்தது. இந்த ட்ரோன்களை அழிக்க இந்திய இராணுவம் பல வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்தியது....

இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிடுவது எங்கள் வேலை அல்ல : ஜே.டி.வான்ஸ்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது. மேலும், அது எங்கள் வேலையும் அல்ல என அந்நாட்டு உப ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார். இந்நிலையில், இந்தியாவின் ஓபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை மற்றும் பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை அடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “போர் பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என நம்மால்...

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் பலி..!

இந்திய படைகளின் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் இராணுவம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய கிராமங்களில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, அத்துமீறலில் ஈடுபட்டது. பூஞ்ச், பாரமுல்லா, ரஜவுரி, குப்வாரா உள்ளிட்ட மாவட்டங்களின் கிராமங்களை குறிவைத்து சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பதுங்கு குழிகளில் ஒளிந்து கொண்டனர். சிலர் பாதுகாப்பான இடங்களை...

பாகிஸ்தானின், லாகூர் செல்லும் இலங்கை விமானங்கள் இடைநிறுத்தம்!

பாகிஸ்தானின், லாகூர் செல்லும் இலங்கை விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் போரின் காரணமாகவே இலங்கை விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தானின், கராச்சிக்கு செல்லும் விமானங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என சிறிலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவுக்கு செல்லும் விமானங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என சிறிலங்கன் விமான சேவை...

இந்தியாவின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

பாகிஸ்தான் மீது இந்தியாவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். அத்துடன், பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதலை நடத்தியதன் மூலம் இந்தியா தவறு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் மீது இந்தியா நேற்றிரவு வான்வழித் தாக்குதலை நடத்தியதையடுத்து, இரு நாடுகளுக்கிடையிலும் பதற்றம் அதிகரித்தது. இந்த தாக்குதலில் 31 பேர்...

பாகிஸ்தானின் மூன்று இடங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்ட இந்தியா!

இந்திய ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானில் ஏழு பேர் பலியானதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் மூன்று இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தனது இராணுவம் ஐந்து இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், சில இந்திய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்டுக் கடல் எல்லைகளிலும் இந்தியா – பாகிஸ்தான் கப்பல்களுக்குத் தடை..!

இந்தியாவிற்குள் பாகிஸ்தான் கப்பல்களும், பாகிஸ்தானுக்குள் இந்தியக் கப்பல்களும் நுழைவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு இந்தியா இன்று (3) அதிகாரப்பூர்வமாகத் தடை விதித்துள்ளது. இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் பாகிஸ்தானில் உள்ள துறைமுகங்களில் நிறுத்துவதற்கும் இந்தியா தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -spot_img

Latest News

அங்குருவதோட்ட முதியோர் இல்ல அனர்த்தம்; உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, பட்டகொட பகுதியில் உள்ள ‘செனஹசே கெடல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 12 பேர் வரையில் உயிரிழந்திருந்த நிலையில் இன்று...
- Advertisement -spot_img