Saturday, July 25, 2026
No menu items!

பேருந்து

பேருந்து பாரவூர்தியுடன் மோதி விபத்து – 22 பேர் காயம்..!

நிட்டம்புவ - கிரிந்திவெல பிரதான வீதியில் இன்று (4/21/2025) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, எதிர் திசையிலிருந்து வந்த பாரவூர்தியுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் வத்துபிட்டிவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதில் 20 பேர் சிகிச்சை நிறைவடைந்த பின்னர் வைத்தியசாலையிருந்து...

பேருந்து மோதியதில் பெண்ணொருவர் பலி..!

தங்காலை - மாத்தறை பிரதான வீதியில் குடாவெல்ல பகுதியில் பேருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (06/04/2025) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடையவர் ஆவார். பஸ் ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் பஸ் தரிப்பிடத்தில் வைத்து குறித்த பஸ்ஸிலிருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட வேளையில் பஸ் மோதி...

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து –  ஒருவர் உயிரிழப்பு..!

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதிய வீதி விபத்தில் பள்ளிவாசல் மௌலவி ஒருவர் உயிரிழந்ததுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (3/16/2025) காலை 7.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாகவும் பேருந்து சாரதியை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனார். காத்தான்குடி முகைதீன் பஸ்ளிவாசல் மௌலவியான 43 வயதுடைய சபீஸ் என்பவரே இவ்வாறு...

வெளிநாட்டு பிரஜைகளை ஏற்றிச் சென்ற பேருந்தை மறித்து கொலை மிரட்டல்!

கண்டி பகுதியில் வெளிநாட்டு பிரஜைகளை ஏற்றிச் சென்ற பேருந்தை மறித்து முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் மிரட்டும் காணொளி வெளியாகியுள்ளது. நேற்று (10) மாலை நடந்த இந்த கொடூரமான செயலைத் தொடர்ந்து, இன்று காலை சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். நாட்டின் முக்கிய வருமான ஆதாரமான சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் தேசிய செல்வத்தை மிகுந்த முயற்சியுடன்...

எதிர்க்கட்சித் தலைவரால் பாடசாலை பேருந்துகளை நன்கொடையாக வழங்க முடியும் – கெளசல்யா!

எதிர்க்கட்சித் தலைவர் விரும்பினால் மீண்டும் பாடசாலைகளுக்கு பேருந்துகளை நன்கொடையாக வழங்க சந்தர்ப்பம் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளசல்யா ஆரியரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலவசக் கல்வியை விற்பனை செய்ய வடிவமைக்கப்பட்ட நவதாராளவாதக் கொள்கைகளை எதிர்த்த வரலாறு எங்களுக்கு உண்டு. பத்தாயிரம் பாடசாலைகளுக்கு பத்தாயிரம் கோடீஸ்வரர்களை தெரிவு செய்வது...

முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதி விபத்து; இருவர் பலி!

மடம்பே கலஹிடியாவா பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் ஒரு இளம் பெண் உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்தனர். விபத்து நடந்த நேரத்தில் முச்சக்கர வண்டியில் ஓட்டுநர் உட்பட 9 பேர் பயணித்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மினுவங்கொட மற்றும் ராகம பகுதிகளைச் சேர்ந்த 32, 36 மற்றும் ஒரு வயதுடைய பெண்கள் என...

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு புதிய பேருந்துகள் கொள்வனவு..!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் முனையச் செயல்பாட்டுப் பிரிவில் பேருந்துகள் மற்றும் விமானங்களை அணுகப் பயன்படுத்தப்படும் ஏணிகள் மிகவும் பழமையானவை என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பேருந்துகள் சுமார் 33 ஆண்டுகள் பழமையானவை என்றும், ஏணிகள் சுமார் 30 ஆண்டுகள் பழமையானவை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய பேருந்துகள் மற்றும் ஏணிகளை கொள்வனவு செய்ய...

தனியார் பேருந்தை வழிமறித்து இரண்டு நபர்கள் தகராறு !

தனியார் பேருந்தை வழிமறித்து காரில் வந்த இரண்டு நபர்கள், அந்த வழித்தடத்தில் இயக்க பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை மிரட்டி கப்பம் கோரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பேருந்தில் இருந்த ஒரு பயணி பதிவு செய்த சம்பவத்தில், காரில் இருந்து ஒருவர் பேருந்தில் ஏறி, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை வாய்மொழியாக திட்டுவதும், பின்னர் அவர்களைத்...

திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து – ஒருவர் பலி..!

உடமலுவ பொலிஸ் பிரிவில் உள்ள சேதவனாராமய அருகில் இன்று (22/02/2025) அதிகாலை யாத்ரீகர்கள் குழுவுடன் பயணித்த பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த பேருந்து எம்பிலிப்பிட்டிய பிரதேசத்திலிருந்து அநுராதபுரம் பிரதேசத்திற்கு வந்த யாத்ரீகர்கள் ஓய்வு விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளனர். இதன்போது, அவர்கள் வந்த பேருந்தில் தீப்பிடித்துள்ளது. அந்த பேருந்தில் இருந்த ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக...

வாடகை பேருந்துகள் தொடர்பில் கொள்கை ஆவணம் தயாரிக்குமாறு ஆளுநர் பணிப்பு..!

வடக்கு மாகாணத்தில் வாடகைக்கு அமர்த்தப்பட்டு சேவையில் ஈடுபடும் பேருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக கொள்கை ஆவணத்தை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மற்றும் பொதுமுகாமையாளர் ஆகியோரைப் பணித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை காலை (20.02.2025) வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட...
- Advertisement -spot_img

Latest News

நாமலின் திருமண நிகழ்வு; 2.68 மில்லியன் மின் கட்டண வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 2.68 மில்லியன் ரூபாய்  செலுத்தப்படாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை...
- Advertisement -spot_img