Saturday, November 7, 2026
No menu items!

பொலிஸார்

திடீரென தீப்பற்றி எரிந்த கார்..!

மொனராகலை - கதிர்காமம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து இன்று வெள்ளிக்கிழமை (30/05/2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காரானது முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடொன்றில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்..!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள வீடு ஒன்றில் ஆண் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை (5/26/2025) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜெயந்திபுரம் குமாரத்தன் கோவில் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான ரவி என அழைக்கப்படும் அண்ணாமலை ரவீந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் வீட்டில்...

ஓமந்தையில் கோர விபத்து – இந்திய துணை தூதரக உயர் அதிகாரி உயிரிழப்பு..!

கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று திங்கட்கிழமை (26.05.2025) அதிகாலை 4.30க்கு ஓமந்தைப் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரின் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் காரில் பயணம்...

பாணந்துறை – விளக்கமறியலில் உள்ள பெண்ணின் வீட்டில் துப்பாக்கிச் சூடு!

பாணந்துறையின் பின்வத்த பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒரு பெண்ணின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு 8:30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். அதிஷ்டவசமாக, யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என செய்திகள்...

வைத்தியசாலையில் நோயாளி எடுத்த விபரீத முடிவு..!

பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தன்னை தானே தாக்கி உயிரை மாய்த்துக் கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் நேற்று (22.05.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மாத்தளைப் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 18ஆம் திகதி குறித்த நபர், மூச்சுத்திணறல்...

கஜமுத்துக்களுடன் சிக்கிய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்..!

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தடை செய்யப்பட்ட 22 கஜமுத்துக்களுடன் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (21.05.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் 57 வயதுடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் கடந்த 2005 ம் ஆண்டில் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டவர்...

மர்மமான முறையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்..!

மொனராகலை மாவட்டம் வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்ப்பிணி பெண் கொலை..!

நிதி தகராறு காரணமாக ஒன்பது மாத கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படும் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்ததுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் தெனியாய, பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் கூலி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த நாளில், இருவருக்கும் இடையே நிதி...

கடலுக்கு நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜைக்கு நேர்ந்த சோகம்!

ஹிக்கடுவ கடலுக்கு நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நேற்று (18) பிற்பகல் நீரில் மூழ்கி காணாமல் போனதாக ஹிக்கடுவ பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது. அதற்கமைய, உயிர் காக்கும் பிரிவினரின் உதவியுடன் குறித்த நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு வேவல கடற்கரைப் பகுதியில் குறித்த நபரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்த...

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து – பயணிகளின் நிலை என்ன?

அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (5/14/2025) அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தால் பேருந்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என மகியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
- Advertisement -spot_img

Latest News

தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கிறது. இன்று (06) முதல் இந்த விசேட போக்குவரத்து...
- Advertisement -spot_img