Monday, June 1, 2026
No menu items!

மட்டக்களப்பு

திடீரென மயங்கி வீழ்ந்து பாடசாலை மாணவி உயிரிழப்பு..!

மட்டக்களப்பு கிரான்குளம் பாடசாலை ஒன்றில்  வகுப்பறையில் 16 வயது மாணவி ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் களுவாங்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (25) பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். கிரான்குளம் 8 பிரிவு அமரசிங்க வீதியைச் சேர்ந்த க.பொ.தர சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும்...

மீன்பிடியில் ஈடுபட்டவர் சடலமாக மீட்பு..!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை நடுத்துறை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல் போன மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு கடலுக்கு மீன்படிக்கச் சென்ற மேற்படி மீனவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் மீன்பிடித்து விட்டு படகின் ஒரு பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல்போயிருந்தார். இவரை...

மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி – பதாகைகள் பொலிஸாரினால் அகற்றம்..!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்பு முதல் தடவையாக எதிர்வரும் சனிக்கிழமை (12.04.202) மட்டக்களப்புக்கு விஜயம் செய்ய உள்ளார். இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் அவரது வருகையை அறிவிக்கும் பதாகைகள் கட்சியினால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவை தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது என முறைப்பாடு கிடைத்ததை அடுத்து மாவட்ட தேர்தல் கண்காணிப்புக் குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து...

தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்து 3 பேர் கைது..!

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் வீதிகளில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்து ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் 3 பேரை இன்று செவ்வாய்க்கிழமை (4/8/2025) அதிகாலை கைது செய்ததுடன் 151 சுவரொட்டிகளை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரசேத்தில் வீதிகளில் சுவரொட்டிகளை ஒட்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று அதிகாலையில்...

மட்டக்களப்பில் தபால் மூல வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடலானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. உதவித் தேர்தல்கள் ஆணையளர் எம்.பி.எம் சுபியான் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (04) இடம் பெற்றது. 2025 உள்ளூர் அதிகாரசபை தேர்தலிற்கான...

மட்டக்களப்பு – கல்முனை வீதியில் விபத்து; ஒருவர் பலி!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் கிரான்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச்சென்ற கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளாகியது. இதனால் மின் கம்பம் உடைந்து தொலைபேசி கம்பத்தில் வீழ்ந்ததில் அதிலிருந்த இணைப்புக் கம்பிகள் வீதியில் வீழ்ந்துள்ளன. இதன்போது அவ்வீதியூடாக பயணித்த மோட்டார்...

நிதி மோசடி தொடர்பில் அருண் தம்பிமுத்து கைது..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து சென்ற நிதி மோசடி விசாரணைப்  பிரிவால் அவர் பாசிக்குடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து இருந்து கோடிக்கணக்கான நிதியை பெற்று மோசடி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

தொடர்ச்சியாக ஒரே இடத்தில் இடம்பெற்ற விபத்துக்கள் – ஒருவர் பலி..!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கிரான்குளம் விஷ்னு ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இடத்தில் புதன்கிழமை (02.04.2025) காலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்து மின் கம்பத்தில் மோதியிருந்தது. அதில் காரைச் செலுத்தி வந்த சாரதி தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளதுடன், கார்...

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான மகிழுந்து..!

இன்று காலை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையிலான பிரதான வீதியூடாக செல்லும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று அருகிலுள்ள மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் காரில் பயணம் செய்தவர் காயமடைந்துள்ளதுடன் கார் பலத்த சேதமடைந்துள்ளது. அத்தோடு உயர்...

மட்டு. சங்குல குளம் தொடர்பில் எழுந்துள்ள பாரிய சர்ச்சை..!

மட்டக்களப்பு வேப்ப வெட்டுவான் பாலர்சேனை கிராமத்தில் காணப்படும் சங்குல குளத்தை அண்டிய பாலர் சேனை கிராமத்தில் சுமார் 412 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். பரம்பரை பரம்பரையாக இங்கு வாழ்ந்து வரும் மக்கள் பிரதானமாக குடிநீருக்காகவும், விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற தங்கள் ஜீபனோபாய தொழில்களுக்காகவும் இந்த சங்குல குளத்தை நம்பி வாழ்கின்றனர். பிரதான நீர்...
- Advertisement -spot_img

Latest News

பேருந்துக் கட்டணத்தை 32 முதல் 33 ரூபாய் வரை அதிகரிக்க கோரிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பேருந்துக் கட்டணங்களில் இடைக்காலத் திருத்தம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை...
- Advertisement -spot_img