Monday, June 1, 2026
No menu items!

மட்டக்களப்பு

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில், ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை நேற்று புதன்கிழமை மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். 38 வயது நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதுடன் அவருக்கு அருகில் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். திக்கோடை சந்திக்கு அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. அம்பலாந்துறையைச் சேர்ந்த...

சட்டத்தரணிக்கு அதிர்ச்சி கொடுத்த உணவுப் பொதியிலிருந்த புழு..!

மட்டக்களப்பு நகரில் சாப்பாட்டு கடை ஒன்றில் வாங்கிய மதிய உணவான சோற்று பாசலில் புழு உள்ளதை கண்டு சட்டத்தரணி ஒருவர் சுகாதார அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்துள்ளார். நேற்று சனிக்கிழமை முறைப்பாடு செய்ததையடுத்து உடனடியாக  குறித்த கடையை சோதனையிட்ட பொது சுகாதரா பரிசோதகர்கள் மனித பாவனைக்கு உதவாத உணவு தயாரிக்கும் பொருட்களை மீட்டதுடன்  கடை உரிமையாளருக்கு எதிராக...

மீன்பிடியில் ஈடுபட்டவரை இழுத்துச் சென்ற முதலை..!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை (20/05/2025) இளம் குடும்பஸ்தரை முதலை இழுத்துச் சென்றுள்ளது. மந்திரியாறு நீரோடை பகுதியில் மூவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே முதலை இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு முதலை இழுத்துச் சென்றவர் கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என தெரியவந்துள்ளது. முதலை இழுத்துச்...

தடம் புரண்ட ரயில்!

கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த 6079 இலக்க மீனகயா நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் தடம் புரண்டுள்ளது. ஹதருஸ் கோட்டை மற்றும் ஹபரணை ரயில் நிலையங்களுக்கு இடையில் இவ்வாறு ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காட்டு யானை ஒன்று ரயிலில் மோதியதன் காரணமாக ரயில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக காவல்துறை அதிகாரி இடைநீக்கம்..!

மட்டக்களப்பு, இடமலை காவல் நிலையத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை, காவன்திஸ்ஸ கல்லூரிக்கு அருகில், குடிபோதையில் மோட்டார் வாகனத்தை ஓட்டியதற்காக, குறித்த பொலிஸ் அதிகாரி கடந்த 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அம்பாறை பிரதேச போக்குவரத்துப்...

மட்டக்களப்பில் குடிமனை பகுதிக்குள் உட்புகுந்த 6 அடி முதலை மடக்கி பிடிப்பு!

மட்டக்களப்பு நகர் பிரதேசத்துக்கு உட்பட்ட சின்ன ஊறணி பிரதேச குடிமனைக்குள் உட் புகுந்த 6 அடி கொண்ட முதலை ஒன்றை இன்று புதன்கிழமை (7) அதிகாலையில் பிரதேச மக்கள் மடக்கி பிடித்து வனஜீவராசிகள் திணைக்களத்திடம்  ஒப்படைத்தனர். அண்மை காலமாக மட்டக்களப்பில் தொடர்ச்சியாக குடிமனைப் பகுதிகளில் முதலைகள் உட்புகுந்து வரும் நடவடிக்கை அதிகரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. (மட்டக்களப்பு நிருபர்-கனகராசா சரவணன்)

மட்டக்களப்பில் இரு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தால் மக்கள் அச்சம்!

மட்டக்களப்பு காத்தான்குடி வர்த்தக நிலையம் ஒன்று தீப்பற்றி எரிந்ததுடன் மீரா பாலிகா தேசிய பாடசாலை மகளிர் கல்லூரிக்குள் வீதியால் சென்று கொண்டிருந்த மீன் ஏற்றிச் சென்ற கனரக லொறியொன்று பாதையை விட்டு விலகி பாடசாலைக்குள் நுழைந்ததில் பாடசாலைக்கு பெரும் சேதம் ஏற்பட்டு இரு பாரிய சம்பவங்கள் இன்று  புதன்கிழமை (07) அதிகாலை  இடம்பெற்றுள்ளதாக பொலிசார்...

தேர்தல் காலத்தில் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை அரிசி பறிமுதல்!

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியில் பாரவூர்தி ஒன்றினூடாக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக குறித்த அரிசி தொகை கொண்டு செல்லப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாரவூர்தியும் அதன் சாரதியும் களுவாஞ்சிக்குடி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 கிலோகிராம் நிறையுடைய...

மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் அனுப்பும் நடவடிக்கை..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில்  தேர்தல் மத்தியஸ்தான இந்து கல்லூரியில் இருந்து வாக்கு சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் வாக்குசீட்டுக்கள் இன்று திங்கட்கிழமை (05) காலை 9.00 எடுத்துச் செல்லும் நடவடிக்கையினை மாவட்ட உதவி தேர்தர் ஆணையாளர் எம்.பி. எம். சுபியான் மற்றும் தெரிவத்தாட்சியும் அரசாங்க அதிபர் திருமதி முரளீதரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில்...

மட்டக்களப்பில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது!

மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நிலையமொன்றுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக 6,000 ரூபாயினை கையூட்டலாக பெற்ற போதே அவர் கைதாகியுள்ளார். கைதானவர் 54 வயதுடையவர் என கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   <!-- -->
- Advertisement -spot_img

Latest News

பேருந்துக் கட்டணத்தை 32 முதல் 33 ரூபாய் வரை அதிகரிக்க கோரிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பேருந்துக் கட்டணங்களில் இடைக்காலத் திருத்தம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை...
- Advertisement -spot_img