Tuesday, July 28, 2026
No menu items!

யானை

இலங்கையின் புகழ்பெற்ற யானை உயிரிழப்பு!

இலங்கையின் புகழ்பெற்ற 'தீகடந்து 1' யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான மின்சார வேலியுடன் தொடர்பு கொண்ட யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 40 மற்றும் 50 வயதுடைய இந்த யானை, கலா வெவா மற்றும் கஹல்ல-பல்லகெல்ல காப்புக்காடுகளுக்கு அடிக்கடி வந்து செல்வதாக அறியப்படுகிறது.

யானை சின்னத்தில் போட்டியிடவுள்ள ஜீவன் தொண்டமான்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டுள்ளார். இ.தொ.கா முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தலைமையிலான கூட்டணியின் கீழ் கட்சியின் பாரம்பரிய யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.  

ரஜமஹா விகாரையின் யானை மலசலகூட குழியில் விழுந்து மரணம்..!

மஹியங்கனை ரஜமஹா விகாரையின் எசல பெரஹராவிற்கு அழைத்து வரப்பட்ட பதுலு முத்தியங்கன ரஜமஹா விகாரையைச் சேர்ந்த 'மது' என்ற யானை ஒன்று பழைய மலசலகூட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக ஹசலக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (12.09) இடம்பெற்றுள்ளது. 30 வயதையுடைய யானையே உயிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எசல பெரஹராவிற்கு கலந்து கொண்ட யானைகளுக்கு உணவளிப்பதற்காக...

யானை தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழப்பு!

வவுனியா போகஸ்வெவ பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 53 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார் இந்த சம்பவம்  இன்று திங்கட்கிழமை (26)  காலை  போகஸ்வெவ பகுதிக்குட்பட்ட சலனிகம கிராம வயற்பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான  மேலதிக விசாரணைகளை  போகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யானைக்கு பதிலாக காஸ் சிலிண்டரை தெரிவு செய்ததன் காரணம்!

அண்மையில் இடம்பெற்ற “ரணிலிடம் கேளுங்கள்” நிகழ்ச்சியின் போது சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி யானைக்கு பதிலாக காஸ் சிலிண்டரை ஏன் சின்னமாக தேர்வு செய்தீர்கள் என்று கேட்டதற்கு, “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்தேன். அரசியல் கட்சிகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற கருத்து இன்று வலுவாக...

வாய்க்காலில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ஆயிரம்கால் மண்டப வீதியில் உள்ள வாய்க்காலில் சடலம் ஒன்று கிராம மக்களால் கண்டு பொலிசாரால் மீட்டெடுக்கபட்டுள்ளது. குறித்த சடலம் விவேகானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த 64 வயதுடைய  பிள்ளையான்குட்டி புலேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் யானை தாக்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் இவர்  வீட்டிலிருந்து புறப்பட்டு ஆயிரம் கால் மண்டப வைரவர் ஆலயத்திற்குச் சென்று, வீடு திரும்பாத...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img