Sunday, July 26, 2026
No menu items!

வரவு - செலவுத் திட்டம்

சர்வதேச நாணய நிதியத்துடன் விசேட கலந்துரையாடல்..!

இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் விடயத்தை மாற்றியமைக்க சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ள அரசாங்கம், அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. பாராளுமன்றத்தில்  அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டம் திங்கட்கிழமை (17/02/2025)  சமர்பிக்கவுள்ளது இதன் பின்னர் மேற்குறிப்பிட்ட கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம்,...

உள்ளூராட்சி தேர்தல் நடத்தும் திகதி அறிவிப்பு!

தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின்னரே உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன், உள்ளூராட்சி சபைகளுக்கான ஆயுட்காலம் முடிவடைந்தது. நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியால் இத்தேர்தல் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தமது அரசாங்கத்தின் கீழ் நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி...

அரச சேவை சம்பள உயர்வுக்காக 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு..!

அரச சேவை சம்பள உயர்வுக்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ஆனந்த விஜேபால, அரச சேவையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் பல நடவடிக்கைகள்...

அரசாங்க சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப அரசு தீர்மானம்..!

அரசாங்க சேவையில் உள்ள 30,000 அத்தியாவசிய வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனையின் கீழ், அரச ஊழியர்களுக்கான நியாயமான அடிப்படை சம்பள அதிகரிப்புக்கான திட்டங்களை முன்வைக்கவும், ஓய்வூதியதாரர்களின் சம்பள முரண்பாடுகளை மூன்று ஆண்டுகளுக்குள் முடிவுக்குக் கொண்டுவரவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில்...

வடக்கு மாகாண திட்டங்கள் தொடர்பில் ஆளுநர் வலியுறுத்தல்…!

2025ஆம் ஆண்டு மக்கள் மாற்றங்களை உணரும் வகையில் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் அமையவேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இந்த ஆண்டுக்குரிய திட்டங்கள் அனைத்தும் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்பட வேண்டும் என மீளவும் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் 2025ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு...

அரச ஊழியர்களின் சம்பள மாற்றம் – IMF எதிர்க்குமா?

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (1/9/2025) நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை...

விரைவில் வரவு செலவுத் திட்டம் சபையில்..!

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் அடுத்த மாதம் 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வரவு செலவு மீதான விவாதத்தை பெப்ரவரி 18 முதல் மார்ச் 21 வரை 26 நாட்களுக்கு நடத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு முடிவு செய்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 18 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி...

மலையகத்திலும் அர்ச்சுனா எம்.பியின் குரலா? – பரபரப்பை ஏற்படுத்தும் பதிவு..!

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மலையக மாவட்டங்களில் களமிறங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட இராமநாதன் அர்ச்சுனா வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகினார். தற்போது உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவரது அணியினர் ஆலோசித்துவரும் பின்புலத்தில், மலையகத்தில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அவர் தமது...

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எப்போது? – வெளியானது அறிவிப்பு..!

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சட்டத்திருத்தங்களை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உள்ளராட்சிமன்றத் தேர்தலை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த வேட்புமனுக்கள் கோரப்பட்டிருந்த போதிலும் கடந்த அரசாங்கம் தேர்தலை நடத்த உரிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டிருக்காமையால் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியிருந்தது. என்றாலும், கடந்த ஆகஸ்ட் மாதம் உயர் நீதிமன்றம்...

புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத் திட்டம் பெப்ரவரி மாத இறுதியில் தாக்கல்…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் முதலாவது வரவு - செலவுத் திட்டம் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறும் இறுதி நாடாளுமன்ற அமர்வில் தாக்கல் செய்வது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில் பின்னர் தனித்து அல்லது கூட்டணி ஆட்சியை அமைக்கும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ளது. ஜனாதிபதித்...
- Advertisement -spot_img

Latest News

தெவிநுவர பெரஹராவில் காவடி நடனத்தை நீக்குமாறு பரிந்துரை

தெவிநுவர ஸ்ரீ உத்பலவன்ன விஷ்ணு தேவாலயத்தின் வரலாற்று சிறப்புமிக்க பெரஹராவில் இடம்பெறவுள்ள காவடி நடன பகுதியை நீக்குமாறு பொலிஸார் பரிந்துரை செய்துள்ளனர். எதிர்வரும் ஜூலை 28 ஆம்...
- Advertisement -spot_img