Friday, June 5, 2026
No menu items!

வைத்தியசாலை

கொட்டாவையில்  விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு!

கொட்டாவை - மாலபல்ல பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து;  12 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று (08) காலை பயணித்த வேன் ஒன்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொறியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின் போது வேனில் பயணித்த 12 பேர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வேனில் பயணித்த குழு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து...

யாழில் மின்னல் தாக்கத்தினால் மக்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக, 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் டி.என். சூரியராஜா தெரிவித்துள்ளார். உடுவில் பிரதேசத்தில் 7 பேரும், கோப்பாய் பிரதேசத்தில் 5 பேரும், மருதங்கேணி பிரதேசத்தில் 4 பேரும், சாவகச்சேரியில் 3 பேரும் மின்னல்...

நீராடிக்கொண்டிருந்த 4 பேர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி!

அனுதாபுரம் - அபய வாவியில் நீராடிக்கொண்டிருந்த 4 பேர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தந்தை, மகன் உட்பட நால்வரே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்படி குறித்த நால்வரும் சிகிச்சைக்காக அனுராதபுரம் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    

கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று விபத்து!

வெலிமடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுகதலாவ பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர். வெலிமடையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று மற்றுமொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது  இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை...

கிரிபத்கொடையில் துப்பாக்கிச் சூடு!

கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் அருகில் இன்று (11) அதிகாலை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 29 வயதுடைய நபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமுற்றுள்ளார்.  

பதுளையில் உந்துருளி விபத்தில் ஒருவர் மரணம்!

பதுளை - பண்டாரவளை வீதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். பண்டாரவளை நகரில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் மீது உந்துருளி மோதியதில் அவர் உயிரிழந்தார். அத்துடன், சம்பவத்தில் காயமடைந்த உந்துருளியின் சாரதி சிகிச்சைகளுக்காக தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பண்டாரவளையைச் சேர்ந்த 36 வயதுடையவரே விபத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

கெப் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!

மீரிகம - பஸ்யால வீதியில் இதிபரபே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து, ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீரிகமவில் இருந்து பஸ்யால நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து எதிர்த்திசையில் பயணித்த கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில்...

புஸா சிறைச்சாலையிலிருந்து ஹெரோயின் மற்றும் பல பாகங்கள் மீட்பு..!

புஸா சிறைச்சாலையின் அறைகள், உட்புறம் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அவசர சோதனையின்போது பல ஹெரோயின், கைத்தொலைபேசிகள் மற்றும் அவற்றின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காலி பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. விசேட அதிரடிப்படையினர் நேற்று இரவு இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதன்போது எட்டு ஸ்மார்ட் கைத்தொலைபேசிகள், ஆறு சார்ஜர்கள், ஐந்து சிம் கார்டுகள்,...

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்; 80 பேர் பலி!

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் சிறுவர்கள் உள்ளிட்ட 80 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் இரவு முழுவதும் தொடர்ந்து வரும் நிலையில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், காசா பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்பட்டு வரும் வைத்தியசாலை மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. எவ்வித முன்னறிவிப்புகளும் இன்றி இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே...
- Advertisement -spot_img

Latest News

அங்குருவதோட்ட முதியோர் இல்ல அனர்த்தம்; உயிரிழப்பு 13 ஆக அதிகரிப்பு

களுத்துறை அங்குருவதோட்ட, பட்டகொட பகுதியில் உள்ள ‘செனஹசே கெடல்ல’ முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று 12 பேர் வரையில் உயிரிழந்திருந்த நிலையில் இன்று...
- Advertisement -spot_img