Friday, November 6, 2026
No menu items!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாமல் ராஜபக்ஷ நாடு திரும்பினார்!

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து வந்ததாகவும், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதைக் காண முடிந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வழக்கொன்றுக்காக, நீதிமன்றில் முன்னிலையாக தவறியமையினால் நேற்று அவரை கைதுசெய்யுமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை...

கொழும்பு மாநகரசபையில் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லை – சாகர காரியவசம்!

கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும்,தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்கப்படமாட்டாது எனவும் அவ்வாறு ஆதரவு...

SJB, SLPP இணைந்து ஆட்சி; தென்னிலங்கை மக்களின் அரசியல் அபிலாசை கேள்விக்குறியா?

ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்குமானால் தென்னிலங்கை மக்களின் அரசியல் அபிலாசை கேள்விக்குறியாகுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை...

நாடு திரும்பவுள்ள பசில் ராஜபக்ச – மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவாரா?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை அவர் நாடு திரும்பவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், அமெரிக்காவிற்குச் சென்ற பசில் ராஜபக்ச அங்கேயே தங்கியிருந்தார். இந்நிலையிலேயே...

உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பில் நாளை கலந்துரையாடல்!

உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாளை (17) கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்க்கட்சிகளின் செயலாளர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். நேற்று (15) இரவு கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்த விடயம் குறித்து கலந்துரையாடலை மேற்கொண்டு உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மைக்கு தேவையான...

கனடாவின் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் குறித்து கொந்தளிக்கும் நாமல்!

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாக நாமல் ராஜபக்ச தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து இதற்கான...

கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பது குறித்த கலந்துறையாடல்..!

கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளுக்கு இடையே முக்கிய கலந்துரையாடல் இந்த வாரம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரசாங்க தரப்பினரைப் போன்று எதிர்க்கட்சியும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கொழும்பு மாநகர சபையில் ஆளும் கட்சி 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில்,...

எங்களுடன் நின்ற அனைவருக்கும் நன்றி. இது வெறும் ஆரம்பம்; நாமல் ராஜபக்ச!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எக்ஸ் தளத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் அவர் பதிவிட்டுள்ளதாவது, “கடந்த ஆறு மாதங்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் ஒன்றிணைந்து, எங்கள் கொள்கைகளுக்கு உண்மையாக இருப்பதன் மூலம் உத்வேகம் பெற்றுள்ளது. சிலர் பொய்யான வாக்குறுதிகளை நம்பியிருந்தாலும், மக்களை...

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு சவால் விடுத்த நாமல் ராஜபக்ஷ!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஒரு துணிச்சலான சவால் விடுத்தார், SLPP அரசியல் தாக்குதல்களுக்கு பயப்படவில்லை என்று வலியுறுத்தினார். மேடையில் இருந்து பேசிய ராஜபக்சே, SLPP உறுப்பினர்களை இழிவுபடுத்தவும் சிறையில் அடைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கட்சி மக்களுக்கான அதன் உறுதிப்பாட்டில் உறுதியாக இருப்பதாக அறிவித்தார். பொஹோட்டுவா...

துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்கான சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

வெல்லம்பிட்டிய - சாலமுல்ல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க இன்று காலை இதனை உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று இரவு சாலமுல்ல பகுதியிலுள்ள லக்சந்த செவன தொடர்மாடி வீட்டுத் தொகுதியின் 6...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சு-சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் இடையே விசேட கலந்துரையாடல்

தொழில் அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) பிராந்திய துணைத் தலைவர் சர்வேஷ் சூரி...
- Advertisement -spot_img