xr:d:DAFPA4-cxsE:232,j:44862209564,t:23010901

இன்று (19.07) காலை மோட்டார் சைக்கிள் ஒன்றும் அம்புலன்ஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

காலி – கொழும்பு வீதியில் தருன சேவா மாவத்தை அருகே, காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பலபிட்டிய வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியுலன்ஸ் வாகனம் எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here