இரகசிய அணு ஆயுத சோதனைகள் நடத்தும் 4 நாடுகள் – டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு!
பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் இரகசியமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன என்று அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், “இத்தகைய சூழலில் அமெரிக்காவும் மீண்டும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுவதில் தவறில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது டொனால்ட் ட்ரம்ப் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.
அவரின் இந்தக் கூற்று, உலகளாவிய பாதுகாப்பு வட்டாரங்களிலும் அணு ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான விவாதங்களிலும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
![]()