
இஸ்ரேல்–ஈரான் பதற்றம்: அமைதிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கை அரசின் வேண்டுகோள்!
இஸ்ரேலும் ஈரானும் தற்போதைய பதற்ற நிலையைத் தவிர்த்து, அமைதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென இலங்கை அரசு வேண்டுகோள்விடுத்துள்ளது..
இரு நாடுகளுக்கிடையேயான சமீபத்திய சம்பவங்கள் தொடர்பாக தீவிர கரிசனையை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இலங்கைத்தூதரகங்கள் முழுமையான கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் தொடர்பாகவும் அவ்வப்போது தகவல்களைப் பெற்றுவருவதாகவும், அவர்கள் அந்நேரத்தில் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் எனவும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், பதற்றங்களை குறைக்கும் முயற்சிகளையும், அமைதிக்கான வழிகளைத் தேடுவதையும் நோக்கமாகக் கொண்டு இருநாடுகளும் நிதானமாக செயல்படக்கூடிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளது.