யாழில் காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை பரிதாபமாக உயரிழந்துள்ளது.
தம்பாட்டி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த ஒரு வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை 21ஆம் திகதி இரவு 11 மணியளவில் உயிரிழந்துள்ளது.
காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.







