சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகளை கடத்திய நபரொருவரை விசேட அதிரடிப்படை படையினர் கைதுசெய்துள்ளனர்.
இரத்தினபுரி, ஹங்கமுவ பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரே சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 200 மான்செஸ்டர் சிகரெட்டுகள் மற்றும் 200 கோல்ட்லீப் சிகரெட்டுகளுடன் ஹம்பாந்தோட்டை கரங்கொடை ஆலயத்திற்கருகில் சோதனை நடத்தியபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.








