பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான கெஹெல்பத்தர பத்மேவின் உதவியாளரான தாகொன்னே அவிஷ்க கிரிபுதா, ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய நேற்று (23) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நீர்த் தாங்கி ஒன்றில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 22 இலட்சம் ரூபா பெறுமதியான 01 கிலோ 70 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளுக்காக இந்த போதைப்பொருள் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.








