கித்துல்கல பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு மாத குழந்தை ஒன்று தாய்க்கு தெரியாமல் வீதியில் விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பில் வசிக்கும் 2 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இரண்டு முச்சக்கரவண்டிகளில் கதிர்காமம் ஊடாக நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்த நிலையில் தாயும் தந்தையும் 6 , 3 வயதுடைய இரு பிள்ளைகள் மற்றும் ஒரு மாத குழந்தையுடன் பயணித்துள்ளனர்.

தாயின் மடியில் இருந்த  குழந்தை முச்சக்கரவண்டியில் இருந்து தவறி கீழே விழுந்ததுள்ளதுடன்

சிறிது தூரம் சென்றபோது குழந்தை மடியில் இல்லை என்பது தாய்க்கு தெரிய வந்ததுள்ளது .

மேலும் வீதியில் பயணித்த வேன் ஒன்றின் சாரதி, குறித்த குழந்தையைப் பார்த்து, கித்துல்கல பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பெற்றோர்கள் பொலிஸாரிடம் சென்ற போதும், உடலில் கீறல்கள் காணப்பட்டதால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழந்தையை கித்துல்கல பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் வைத்தியசாலை நிர்வாகம் குழந்தையை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here