January 13, 2026
இந்தோனேசியாவில் மனிதனை விழுங்கிய மலைப்பாம்பு: 63 வயது விவசாயியின் உடல் கண்டெடுப்பு!
World News புதிய செய்திகள்

இந்தோனேசியாவில் மனிதனை விழுங்கிய மலைப்பாம்பு: 63 வயது விவசாயியின் உடல் கண்டெடுப்பு!

Jul 8, 2025

தென்கிழக்கு சுலவேசியின் தெற்கு பூட்டன் மாவட்டத்தில் உள்ள படாகா துணை மாவட்டத்தைச் சேர்ந்த எல்.என் எனும் 63 வயது விவசாயி, 8 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பின் வயிற்றில் கண்டெடுக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரி சனிக்கிழமை உறுதிப்படுத்தினார்.

மத்திய இந்தோனேசியா நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு படாகா துணை மாவட்டத்தின் மஜாபஹித் கிராமத்தில் எல்.என்-ன் உடல் குடியிருப்பாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று தெற்கு பூட்டனின் பிராந்திய பேரிடர் மேலாண்மை அமைப்பின் (பிபிபிடி) அவசர மற்றும் தளவாடப் பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர் தனது தோட்டத்திலிருந்து வீடு திரும்பாததால் வெள்ளிக்கிழமை காலை முதல் அவர் காணாமல் போனதாக தெரிவித்துள்ள நிலையில்,
பாதிக்கப்பட்ட விவசாயி  ஒரு பாம்பினால் விழுங்கப்பட்டதைக் குடியிருப்பாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தோட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக பெரிய மலைப்பாம்பை சந்தித்தபோது குடியிருப்பாளர்கள் சந்தேகித்து, அதைக் கொன்றதாகவும், “பாம்பின் வயிற்றை வெட்டிப் பார்த்தபோது, ​​உண்மையில் பாதிக்கப்பட்டவர் விழுங்கப்பட்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த கொடூரமான கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, பிராந்திய பேரிடர் மேலாண்மை அமைப்பு, உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து, எல்என் உடலை அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

இதனைத்தொடர்ந்து, இப்பகுதியில் ஒரு குடியிருப்பாளர் மலைப்பாம்பினால் விழுங்கப்படுவது இதுவே முதல் தடவை என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *