அமெரிக்க சட்டத்தை மீறி அதிக காலம் தங்கியிருந்ததன் காரணமாக, 6,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர் விசாக்களை அமெரிக்க வெளியுறவுத்துறை இரத்து செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜனவரி முதல் ஆயிரக்கணக்கான மாணவர் விசாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், குடியேற்றம் மற்றும் சர்வதேச மாணவர்கள் மீதான அடக்குமுறையைத் தொடர்ந்து ட்ரம்ப் நிர்வாகம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மாணவர் விசா ரத்து நடவடிக்கைக்கு ஜனநாயகக் கட்சியினர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்கு முன், இவ்வாண்டின் தொடக்கத்தில் சர்வதேச மாணவர்களுக்கான விசா நியமனங்களை ட்ரம்ப் நிர்வாகம் இடைநிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.







