அமெரிக்காவுடன் பரஸ்பர வரிகள் தொடர்பாக இலங்கை இதுவரை இறுதி ஒப்பந்தத்தை எட்டவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், இலங்கை–அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகள் இதுவரை 17 சுற்றுகள் முடிந்துள்ளதாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது குறிப்பிட்டார்.
இந்த பேச்சுவார்த்தைகளின் பயனாக, இலங்கைக்கான சில வரிகள் 44% இலிருந்து 20% ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நவம்பர் 13 அன்று பிறப்பித்த உத்தரவு மூலம், இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில உணவுப் பொருட்களுக்கான வரிகள் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது, இரு நாடுகளுக்குமிடையேயான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.







