அம்பாறை மாவட்டம், பதியதலாவ மரங்கல பகுதியில், இளம் பெண்ணொருவர் இன்று அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த இளைஞர் பின்னர் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

22 வயதான சரோஜா உதயங்கனி என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலையைச் செய்த 31 வயதுடைய இளைஞர், மொனராகலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின்போது, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர், சரோஜாவின் தாய் மற்றும் தந்தை மீதும் தாக்குதல் நடத்தினார்.

இதனால் இருவரும் காயமடைந்து மஹா ஓயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பரிதாபகரமான சம்பவம் தொடர்பாக பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here