அரிசி இறக்குமதிக்கான விலைமனு இன்று(29) முதல் கோரப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் இன்று (29) முதல் 7 நாட்களுக்குள் இறக்குமதியாளர்கள் விண்ணப்பிக்க முடியும் என லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சமித்த பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு கட்டங்களின் கீழ் 70 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்கு முன்னர் அரிசியை சந்தைகளுக்கு விநியோகிக்கும் எதிர்பார்ப்புடன், இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

இறக்குமதி செய்யப்படும் அரிசியை லங்கா சதொச விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் மொத்த வியாபாரிகள் ஊடாகவும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக லங்கா சதொச தலைவர் கலாநிதி சமித்த பெரேரா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here