ஆபிரிக்காவில் இந்த ஆண்டு பதிவான குரங்கம்மை தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,700 ஐ தாண்டியுள்ளது. ஆபிரிக்க ஒன்றிய சுகாதார நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டது.

ஒரே வாரத்தில் 1,200 நோய்த் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இவ்வாண்டு ஆபிரிக்காவில் குரங்கம்மைத் தொற்றால் சுமார் 540 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கொங்கோ குடியரசு அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு ஒரே வாரத்தில் சுமார் 1,000 நோய்த் தொற்றாளர்கள் பதிவானதோடு 24 பேர் உயிரிழந்துள்ளனர்..

ஆபிரிக்காவுக்கு அப்பால் ஸ்வீடனிலும், பாகிஸ்தானிலும் குரங்கம்மைத் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளன. உலகளவில் நாடுகளுக்கிடையே இவை தொடர்பான விழிப்புநிலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் குரங்கம்மைத் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here