தற்போதுள்ள இலங்கை மின்சார சபை பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது என ஆளும்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

அத்துடன் இலங்கை மின்சார சபை ஒரே நிறுவனமாக இருப்பது அதன் உற்பத்தித்திறனுக்குத் தீங்கு விளைவிக்கும் எனவும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

சலுகைகளை அதிகரிக்கும் வகையில் இலங்கை மின்சார சபையை ஐந்து நிறுவனங்களாகப் பிரிக்கும் திட்டம் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை தற்போது திறைசேரிக்கு சுமார் 200 பில்லியன் ரூபாய் கடன்பட்டுள்ளதாகவும், தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here