இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் பணியாற்றி வந்த ஒரு இலங்கையர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார தெரிவித்துள்ளார்.
காலியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
ஆபிரிக்காவைச் சேர்ந்த ஒருவரால் இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டதாகவும், குறித்த நபர் இரண்டு மாதங்களுக்கு முன்தான் இஸ்ரேலுக்கு சென்றிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் காவல்துறை மற்றும் இன்டர்போல் பிரிவு இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தூதுவர் நிமால் பண்டார தெரிவித்துள்ளார்.








