ஈஸ்டர் தாக்குதலின் இழப்பீட்டில் ஒரு தொகை பணத்தை வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கால அவகாசம் கோரியுள்ளார்.
அத்துடன் 100 மில்லியன் ரூபா இழப்பீட்டுத்தொகையில் 58 மில்லியன் ரூபாவை மாத்திரமே அவர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 100 மில்லியன் வழங்க வேண்டும் என 2023ம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் முன்னைய அரசாங்கத்தின் அதிகாரிகள் பலருக்கும் நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது.
அத்துடன் புலனாய்வுத்தகவல் கிடைத்தும் ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறியமைக்கு எதிராக இவ்வாறான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபாவும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு 50 மில்லியன் ரூபாவும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் தேசிய புலனாய்வு தலைவர் சிசிர மெண்டிஸ் ஆகியோருக்கு 75 மில்லியன் ரூபாவும் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், கத்தோலிக்க மதகுருமார்கள் மற்றும் பலர் தாக்கல் செய்த 12 மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர் கொண்ட அமர்வு முன் விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.








