உகாண்டாவில் இடம்பெற்ற ஒரு கடுமையான பல வாகன விபத்தில் 63 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த மோசமான விபத்து, இரு பேருந்துகள், ஒரு பாரவூர்தி மற்றும் சிற்றுந்து ஆகிய வாகனங்கள் ஒருவரையொருவர் முந்திச்செல்ல முயன்றபோது, பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் ஏற்பட்டதாக உகாண்டா காவல்துறை தெரிவித்துள்ளது.

மோதலுக்குப் பிறகு மற்ற வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாகவும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணைகள் தொடர்கின்றன எனவும் கூறப்படுகிறது.

உகாண்டாவிலும் பிற ஆப்ரிக்க நாடுகளிலும் போக்குவரத்து விதிகளை மீறும் நிலைமை மற்றும் வாகனங்கள் பராமரிப்பு குறைபாடுகள், பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு காரணமாக உள்ளன என முன்னர் வெளியான ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here